medical benefits of omam Seeds in tamil: ஓமம், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஒரு அற்புத மூலிகையாக உள்ளது. இவற்றில் புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்புசத்து போன்ற சத்துக்களும், வைட்டமின் ஏ, பி ஆகியவையும் உள்ளன. மேலும், இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறது.
ஓமத்தின் அற்புத மருத்துவ குணங்கள்:

காய்ச்சலால் அவதிப்படும் மக்கள் ஓமம், சுக்கு, கருப்பட்டி சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால், வந்த காய்ச்சல் பறந்து போகும்.
சிறிதளவு ஓமத்தை மென்று தின்று, ஒரு டம்ளர் சூடான வெந்நீர் குடித்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும். மேலும், வாயு பிரச்சனையையும் போக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கோலிக் என்னும் கடும் வயிற்று வலியை ஓமத் தண்ணீர் குணமாக்கும் வல்லமை படைத்தது.
ஓமம், ஆரம்பநிலை ஆதுமாவை குணமாக்கும் ஆற்றல் படைத்தது. மற்றும் மத்திய நிலை ஆதுமாவை இது கட்டுக்குள் வைக்கிறது.
ஓமத்துடன் தேகாய்த் துருவல் சேர்த்து லேசாக வறுத்து, பின் அவற்றை அரைத்து குழம்பு தயார் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
ஓம பொடியை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் ஜீரண பிரச்சனை தீரும். நல்ல பசி எடுக்கும்
ஓமம் – சி ன்ன வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்து பத்துப்போட்டால் ஒற்றைத் தலை வலி தீரும்.

ஓமத்தை மெல்லிய துணியில் முடிந்து நுகர்ந்தால் சளித் தொல்லை இருக்காது.
இருமலை ஏற்படுத்தும் தொற்று கிருமிகளை ஓமத்திலுள்ள “தைமால்” என்ற வேதிப்பொருள் கொல்லுகிறது. மேலும், மூக்கடைப்பையும் போக்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“