Carrot Beet Juice Recipe tamil: பருவ மாற்றம் ஏற்பட்டு வரும் இந்த தருணத்தில் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும் உணவுகளை தெரிவு செய்து உட்கொள்ளல் வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். அந்த வகைகள் இந்த குளிர்கால பருவத்தில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை நமது உணவுகளுடன் சேர்த்து கொள்வது அவசியமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக வேர் காய்கறிகளான கேரட் மற்றும் பீட்ரூட்டை நமது அன்றாட உணவு மற்றும் ஜூஸ்களுடன் சேர்த்துகொள்து மிகவும் நல்லது.
Advertisment
இந்த இரண்டு வேர் காய்கறிகளிலும் வைட்டமின் சி, ஏ, துத்தநாகம், போலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. மேலும், இவை சரும பொலிவு மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
இந்த அற்புதமான வேர் காய்கறிகளில் எப்படி சிம்பிள் செய்முறையில் ஜூஸ் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Advertisment
Advertisements
கேரட் - பீட்ரூட் ஜூஸ் செய்யத் தேவையான பொருட்கள் :
பீட்ரூட் - பாதி கேரட் - 4 இஞ்சி - சிறிய துண்டு தண்ணீர் - 1/2 கப் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கேரட் - பீட்ரூட் ஜூஸ் செய்முறை:
முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
பின்னர், அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.
இப்போது அவற்றை வடிகட்டி பருகி மகிழவும்.
இந்த அற்புதமான கேரட் பீட்ரூட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது மிகவும் நல்லது. நீங்கள் விரும்பினால் இவற்றுடன் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“