carrot benefits in Tamil:வேர்க் காய்கறிகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக கேரட் வலம் வருகிறது. ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் இந்த கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிக இனிமையாக இருக்கும். இவை பல மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒன்றாகவும் உள்ளன.
Advertisment
அந்த வகையில், கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கேரட் தரும் ஆரோக்கிய நன்மைகள்:
Advertisment
Advertisements
கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இவற்றில் குறைவான கலோரிகள் இருப்பதால் டயட் இருப்பவர்கள் கேரட்டை தவறாமல் சாப்பிடலாம். இவற்றை அன்றாட சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலே முறியடிக்கலாம்.
கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது. எனவே இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து குறையும்.
இந்த அற்புத காய்கறியை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாகவோ சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிட்டால் இவற்றில் உள்ள சத்துக்களை முழுமையாக பெறலாம். இதன் மூலம் இதய தொடர்பான நோய்களையும் தடுக்க முடியும்.
கேரட்டில் உள்ள நார்ச்சத்து காரணமாக அவற்றை ஒரு கப் அளவு தினந்தோறும் என தொடர்ந்து 3 வாரம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
கேரட்டை வேகவைப்பதன் மூலம் அதன் கடினமான சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோட்டின் வெளிவருகிறது. எனவே, இவற்றை சமைக்கும் போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் அதன் மொத்த சத்தையும் உடல் நன்றாக எடுத்து கொள்ளும்.
பீட்டா கரோட்டின் சத்து நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்-ஏ வாக மாறுகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குவதுடன் சரும பளபளப்புக்கும் உதவுகிறது.
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மாலைக்கண் நோயை குணமாக்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“