Carrot recipes in tamil: வேர்க் காய்கறிகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் இந்த கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிக இனிமையாக இருக்கும். மேலும், இவை பல மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒன்றாகவும் உள்ளன.
கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இவற்றில் குறைவான கலோரிகள் இருப்பதால் டயட் இருப்பவர்கள் கேரட்டை தவறாமல் சாப்பிடலாம். இவற்றை அன்றாட சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலே முறியடிக்கலாம்.
கேரட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உடல் அழகைப் பராமரிக்கவும் உதவுகிறது. தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருவதால் முகம் பளபளப்பாக மாறும்.
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் எ, பையோடின், வைட்டமின் பி6, வைட்டமின் கே1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகளை செய்கின்றன.
இப்படி ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கேரட்டில் எப்படி சத்தான மற்றும் சுவையான சூப் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
கேரட் சூப் செய்யத் தேவையான பொருட்கள்
கேரட் - 6
தக்காளி - 1
பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - சிறிதளவு
வெண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் சூப் சிம்பிள் செய்முறை
கேரட் சூப் தயார் செய்ய முதலில் கேரட்டின் தோல்களை நன்றாக சீவி, அவற்றை துருவிக் கொள்ளவும். தொடர்ந்து கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு தக்காளி மற்றும் கேரட்டை வேக வைத்து, இரண்டையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர், ஒரு பாத்திரத்தை எடுத்து அதை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு சூடேற்றவும். அவை உருகியதும், பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அவற்றில் உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளவும்.
இப்போது சூப் நன்கு கொதிக்க தொடங்கும். அவை நன்றாக கொதித்து வந்ததும், அவற்ற கீழே இறக்கி மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழையை தூவிக்கொள்ளவும். பிறகு அவற்றை பரிமாறி ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.