சீரகம், இலவங்கப்பட்டை நீர்… காலையில் குடிச்சுப் பாருங்க; 5 பயன்கள்!

Health Benefits Of Cinnamon-Fennel-Cumin Detox Water tamil: இலவங்கப்பட்டை நீர் நச்சுகளை வெளியேற்றவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும், இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

Cinnamon Water Benefits in tamil: Benefits Of Detox Cinnamon Water tamil

Cinnamon Benefits in tamil: தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்க நாம் தயாராகி வரும் இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பண்டிகையை சுறுசுறுப்புடன் கொண்டாடவும், பண்டிகையின் போது நாம் சாப்பிடும் உணவுகள் நமக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படத்தக்கூடாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியாகும்.

இந்த நாட்களில் நாம் உட்கொள்ளும் உணவுகள் நமக்கு ஏதேனும் பிரச்னையை தரக்கூடும். ஆகவே தான், நமது இணைய பக்கத்தில் சில பானங்களை அன்றாட பகிர்ந்து வருகிறோம். இன்று நாம் பார்க்கவுள்ள இலவங்கப்பட்டை நீர் பானம் நமது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதுடன் பண்டிகை காலத்தில் நாம் உற்சாகத்துடன் இருக்க நமக்கு உதவுகின்றது.

இந்த அற்புதமான பானம் நச்சுகளை வெளியேற்றுவது மட்டுமின்றி, நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. இந்த உன்னதமான இலவங்கப்பட்டை நீர் பானத்தில் நாம் சீரகம் மற்றும் பெருஞ்சீரகத்தை சேர்க்கிறோம். அவையும் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.

இலவங்கப்பட்டை நீரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:-

  1. நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது:

இந்த பானத்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலாப் பொருட்களிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களை நச்சுத்தன்மையாக்க போராட உதவுகிறது.

  1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது:

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படும் இந்த பானத்தில் பாலிபினால்கள், புரோந்தோசயனிடின்கள், ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஆகியவையும் அடங்கியுள்ளன.

3.எடை இழப்பை ஊக்குவிக்கவும்:

இந்த பாரம்பரிய மசாலா, மூலிகை தேநீர் அல்லது நச்சு நீர் வடிவில் குடிக்கும் போது வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்க உதவும். இந்தக் காரணிகள் கூடுதல் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

  1. நீரிழிவு நோயை நிர்வகிறது:

இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகளைக் கொண்டுள்ளன. அதாவது, சரியான அளவில் எடுத்துக் கொண்டால், இந்த பானம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடும்.

  1. ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது:

முன்பு குறிப்பிட்டது போல், இந்த மூன்று மசாலாப் பொருட்களிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. அதோடு, தோல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் காரணிகளையும் உள்ளடக்கியுள்ளது.

இலவங்கப்பட்டை நீர் பானம் செய்முறை:-

செய்முறை 1:

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், பெருஞ்சீரகம் மற்றும் சீரக தூள் சேர்க்கவும்.

10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். இப்போது தண்ணீரை வடிகட்டி பருகவும்.

இந்த அற்புத பானத்தில் சிறிது சுவையை சேர்க்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

செய்முறை 2:

அரை இஞ்ச் இலவங்கப்பட்டை, அரை டீஸ்பூன் ஜீரா மற்றும் அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மறுநாள் காலை அதில் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பிறகு தண்ணீரை வடிகட்டி பருகவும்.

உங்கள் காலையை இந்த ஆரோக்கியமான இலவங்கப்பட்டை தண்ணீருடன் வெறும் வயிற்றில் ஆரம்பித்து நாள் முழுவதும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை அனுபவிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cinnamon water benefits in tamil benefits of detox cinnamon water tamil

Next Story
மனம் மகிழும் தீபாவளி… உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்து சொல்ல இனிய புகைப்படங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com