காஃபியுடன் சிறிது நெய்… ஆயுர்வேதம் சொல்வதை கவனியுங்க!

reasons to be mindful about coffee consumption in tamil: அதிகப்படியான வறட்சியை எதிர்க்க கருப்பு காஃபியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் மிகவும் நல்லது.

coffee recipe in tamil: Ayurvedic remedy for consuming coffee

coffee recipe in tamil: நம்மில் பலர் ஒரு கப் காஃபியுடன் நம் நாளைத் தொடங்கி, நாள் முழுவதும் ஆறு முதல் ஏழு கப்கள் வரை சாப்பிடுகிறோம். ஆனால் அதிகப்படியான நுகர்வு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் ஒரு காஃபி பிரியராக இருந்தால் ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவது மிகவும் நல்லது.

காஃபி நுகர்வு குறித்து கவனத்துடன் இருப்பதற்கான காரணங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டாக்டர் அபர்ணா பத்மநாபன், காபி ஒரு தூண்டுகோல் எனவும், அவற்றை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இங்கு பார்க்கலாம்.

காஃபி அமிலத்தன்மையைத் தூண்டும் என்பதால் வெறும் வயிற்றில் தவிர்ப்பது நல்லது

நீங்கள் ஒரு வேளை கவலை அல்லது அமிலத்தன்மை அல்லது அதிக வறட்சி உணர்ந்தால் அவற்றுடன் பால் சேர்த்து பருகவும்.

அதிகப்படியான வறட்சியை எதிர்க்க கருப்பு காஃபியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் நல்லது.

தூக்கத்தை தொந்தரவு செய்தால் மாலை 3 மணிக்குப் பிறகு காஃபியைத் தவிர்க்கவும்.

மெனோபாஸ், தோல் நோய்கள், அமைதியின்மை ஆகியவற்றுடன் சென்றால் காஃபியைத் தவிர்க்கவும்.

“காஃபியில் நிறைய ‘ராஜஸ்’ அல்லது செயல்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே, உங்களுக்கு சோம்பல் இருந்தால், காலை 8-10 மணிக்குள் ஒரு கப் குடிப்பது நல்லது, ”என்று டாக்டர் அபர்ணா குறிப்பிட்டுள்ளார்.

மதியவேளைகளில் காஃபி குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இது செரிமானத்தை குறைக்கும் மற்றும் உங்களுக்கு உணவு பசி இருக்காது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coffee recipe in tamil ayurvedic remedy for consuming coffee

Next Story
டான்ஸர், சின்னத்திரையில் பாசமான சிஸ்டர்.. மோசமான வில்லி.. நாம் இருவர் நமக்கு இருவர்2 காயத்ரி ப்ரொஃபைல்!gayathri yuvaraj
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com