வெதுவெதுப்பான பால், 4 உலர் முந்திரி பழம்… இவ்ளோ சூப்பரான தயிர் பாத்திருக்கவே மாட்டீங்க!

Benefits of having curd and raisin in tamil: தயிர் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், பிபியைக் குறைப்பதற்கும் மற்றும் எடை இழப்பை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.

Curd recipe in tamil: ​How to set curd using raisins tamil

Curd recipe in tamil: ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை, சரியான நேரத்தில் சரியான உணவு மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமற்ற மற்றும் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ளாத பழக்கங்கள் பெரும்பாலும் முடி உதிர்தல் மற்றும் தூக்கம், முன்கூட்டிய நரைத்தல், மலச்சிக்கல் மற்றும் வாய்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் எழுத்தாளருமான ருஜுதா திவேகர்.

எனவே தினசரி உணவை ஒழுங்குபடுத்துவது மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது நிச்சயமாக நமது உடலில் சமநிலையைக் கொண்டுவர உதவும் என்று ருஜுதா திவேகர் பரிந்துரைக்கிறார். அந்த வகையில் மிகவும் சத்தான மற்றும் ஹெல்தியான உணவுப்பொருளாக முந்திரி பழம் – தயிர் கலவை உள்ளது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் இந்த சுவைமிகுந்த கலவை மேலே கூறப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்வு தருகிறது. இன்னும் எண்ணற்ற ஆரோக்கிய பயன்களை கொண்டுள்ள இந்த கலவையின் சில முக்கிய நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

முந்திரி பழம் – தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

முந்திரி பழம் – தயிர் கலவையை மதிய உணவுடன் சேர்த்து ருசிக்கலாம் அல்லது 3-4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் உட்கொள்ளலாம் என ருஜுதா திவேகர் குறிப்பிடுகிறார்.

இந்த அற்புத கலவையில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகளாக ருஜுதா திவேகர் கூறுவது பின்வறுமாறு:-

“தயிர் ஒரு புரோபயாடிக் ஆகவும், முந்திரி பழம் கரையக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் ப்ரீபயாடிக் ஆகவும் செயல்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து, கெட்ட பாக்டீரியாக்களை நடுநிலையாக்குகின்றன, நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன, குடல் அழற்சியைக் குறைக்கின்றன, உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.

இந்த கலவை எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கும் நல்லது. தயிர் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், பிபியைக் குறைப்பதற்கும் மற்றும் எடை இழப்பை ஊக்குவிப்பதற்கும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட தலையீடு ஆகும். மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் திராட்சையை மெல்லுவதை எளிதாக்குவதால், வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.” என்று கூறியுள்ளார்.

முந்திரி பழத்தை பயன்படுத்தி தயிர் அமைப்பது எப்படி?

முதலில் சூடான பால் 1 கப் எடுத்துக்கொள்ளவும். அவற்றுடன் 4 முதல் 5 முந்திரி பழங்களை சேர்க்கவும். (கருப்பு முந்திரி சேர்ப்பது மிகவும் நல்லது)

பிறகு அவற்றுடன் சிறிதளவு தயிர் அல்லது உறை மோர் சேர்க்கவும்.

பின்னர் இந்த கலவையை நன்றாக குறைந்து 32 முறை மிக்ஸ் செய்துகொள்ளவும்.

பிறகு பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, 8 முதல் 12 மணி நேரம் வரை தனியாக ஓர் இடத்தில் வைக்கவும்.

இப்போது திறந்து பார்த்தால் அற்புதமான முந்திரி பழம் கலந்த தயிர் தயாராக இருக்கும். இவற்றுறை சாதத்துடனோ அல்லது சாதாரணமாகவோ சுவைத்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Curd recipe in tamil how to set curd using raisins tamil

Next Story
இங்கு தான் பெண் ஆணைத் தேடுகிறாள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com