Advertisment

இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து… வெந்தயம் தரும் பயன்கள் இவ்ளோ அதிகம்!

Soaked fenugreek seeds top health benefits in tamil: நரம்பியல், பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்று வலி, வீக்கம், உடலின் எந்தப் பகுதியிலும் வலி (முதுகுவலி, முழங்கால் மூட்டு வலி, தசைப்பிடிப்பு) போன்ற வாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தயம் பயனுள்ளதாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fenugreek benefits tamil: From controlling diabetes to relieving constipation Ayurvedic benefits methi tamil

Tamil Health tips: நம்முடைய தினசரி உடல்நலப் பிரச்சினைகளை திறம்பட நிர்வகிக்க உதவும் மூலப்பொருட்களின் சக்தியாக நமது சமையலறை உள்ளது. அதனால்தான், நம் பெரியவர்கள் மட்டுமல்லாமல், ஆயுர்வேத பயிற்சியாளர்களும் நம் ஆரோக்கியத்திற்கு உதவும் மசாலா மற்றும் மூலிகைகளை தினசரி நமது சமையலில் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

Advertisment

அந்த வகையில் நமது அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் முக்கிய இடத்தைப்பித்துள்ள வெந்தயத்தை ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் டிக்சா பவ்சர் இங்கு பரிந்துரைத்துள்ளார். இந்த அற்புதமான மூலிகை உணவில் சுவை சேர்ப்பதோடு, வாழ்க்கை முறைப் பிரச்சினைகளை நிர்வகிக்கவும் உதவுகின்றன என்பதைப் அவர் இங்கு பகிர்ந்துள்ளார்.

“வெந்தயம் என்பது நம்பமுடியாத ஆயுர்வேத மூலிகையாகும். இது பெரும்பாலும் ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளுடன் பயன்படுத்த உதவுகிறது.

இவை உணவுகளுக்கு சுவை சேர்ப்பது முதல் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது, மலச்சிக்கலைப் போக்குவது, சருமம், முடி மற்றும் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன” என்று டாக்டர் பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

publive-image

வெந்தயத்தில் புரதம், கொழுப்புகள், கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, சி, கே, பி, மாங்கனீசு, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், நார்ச்சத்து மற்றும் நீர் போன்ற சத்துக்களும், தாதுக்களும் உள்ளன என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் பவ்சர் பட்டியலிட்டுள்ள வெந்தயத்தின் பயன்கள் பின்வறுமாறு:-

வெந்தயம் பசியையும் ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பதை ஆதரிக்கிறது.

இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது.

publive-image

இது முடி உதிர்தல், நரை முடி மற்றும் யூரிக் அமில அளவுகளை (கௌட்) குறைக்கிறது. இது இரத்த அளவை மேம்படுத்துகிறது (இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது), மேலும் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது.

நரம்பியல், பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்று வலி, வீக்கம், உடலின் எந்தப் பகுதியிலும் வலி (முதுகுவலி, முழங்கால் மூட்டு வலி, தசைப்பிடிப்பு) போன்ற வாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தயம் பயனுள்ளதாக இருக்கும்.

வெந்தயம் இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு நெரிசல் மற்றும் உடல் பருமன் போன்ற கபா கோளாறுகளை போக்க உதவுகிறது.

வெந்தயத்தை எப்போது தவிர்க்க்க வேண்டும்?

publive-image

மூக்கிலிருந்து இரத்தப்போக்கு, அதிக மாதவிடாய் போன்ற இரத்தப்போக்கு கோளாறுகள் ஏற்படும் போது வெந்தயத்தை பயன்படுத்தக்கூடாது. இதன் வெப்பத்தை உருவாக்கும் ஆற்றல் காரணமாக, இது உடலில் கபா மற்றும் வட்டாவை சமநிலைப்படுத்த உதவுகிறது என்று டாக்டர் பாவ்சர் கூறுகின்றார்.

வெந்தயத்தை பயன்படுவது எப்படி?

1-2 டேபிள் ஸ்பூன் விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிடுங்கள் அல்லது டீயாக பருகி வாருங்கள்.

1 டீஸ்பூன் வெந்த பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவுக்கு முன் அல்லது இரவில் வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள்.

publive-image

வெந்தயத்தை பேஸ்ட் செய்து தயிர்/கற்றாழை ஜெல்/தண்ணீரில் சேர்த்து தலையில் தடவி வர பொடுகு, முடி உதிர்தல், நரை முடி குறையும்.

கருவளையங்கள், முகப்பரு, முகப்பரு தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றில் இருந்து விடுபட ரோஸ் வாட்டருடன் தயாரிக்கப்பட்ட வெந்தய பேஸ்ட்டைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும்.

"மருத்துவ நோக்கத்திற்காக வெந்தயத்தை உட்கொள்ளும் முன் எப்போதும் ஆயுர்வேத மருத்துவரை அணுகுவது சிறந்தது," என்று டாக்டர் டிக்சா பவ்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Tamil Health Tips Fenugreek Seeds Benefits Of Fenugreek Seeds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment