/tamil-ie/media/media_files/uploads/2020/07/friendship-day-759.jpg)
நண்பர்கள் தினம் 2020
Friendship Day 2020 Date: நண்பர்களுக்கிடையேயான சிறப்பான உறவைக் கொண்டாட மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘நண்பர்கள் தினம்’ இந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படும்.
பிரபல மாடலின் கொள்ளை அழகுக்கு காரணமான அந்த ஜூஸ்… என்ன தெரியுமா?
Friendship Day History
நண்பர்கள் தினம் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் பராகுவேயில் 1958-ல் சர்வதேச நண்பர்கள் தினமாக முன்மொழியப்பட்டது. இருப்பினும், இது 1930-ஆம் ஆண்டில், ஜாய்ஸ் ஹால் என்பவரால் ஹால்மார்க் அட்டைகளிலிருந்து தோன்றியதாக தெரிகிறது. இறுதியாக ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 30-ஐ அதிகாரப்பூர்வ சர்வதேச நண்பர்கள் தினமாக அறிவித்தது. இருப்பினும், இந்தியாவில் இது பொதுவாக ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
Friendship day ட்ரெண்டிங் ஸ்டேட்டஸ்.. நீங்க பாத்தீங்களா?
1998 ஆம் ஆண்டில், ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னனின் மனைவி, நானே அன்னன், ஐ.நா.வில் நட்பின் உலகளாவிய தூதராக வின்னீ தி பூஹை அறிவித்தார்.
பெட்டிக் கடை ஓனர் டூ எம்.எல்.ஏ.: செக்ஸ் புகாரில் சரிந்த நாஞ்சில் முருகேசன் பின்னணி
இந்த நாளில், மக்கள் தங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்பி, பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள், மெட்ரோ நகரங்களில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது. உங்கள் வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள் வகிக்கும் பங்கை ஒப்புக் கொள்ள வேண்டிய நாள் இது. குழந்தைகள் ஒருவருக்கொருவர் மணிக்கட்டில் ஃபிரெண்ட்ஷிப் பேண்டை கட்டுவார்கள், சிலர் பூக்களை பரிசாக தருகிறார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சமூக விலகல் காரணமாக இது தடைபடும். நண்பர்கள் பலர் தங்கள் நட்பின் மகத்துவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொள்வார்கள். சிலர் பெற்றோர்களுடனும் இந்த சிறப்பு உறவைப் பகிர்ந்து கொண்டாடுகிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.