Advertisment

எடை இழப்பு, இரத்த ஓட்ட அதிகரிப்பு… பச்சைப்பயறு மசியலுக்கு சிம்பிள் டிப்ஸ்!

Green Moong dal Masiyal or Pachai Payaru Kadayal recipes in tamil: உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பச்சைப்பயறை ஒரு நேர உணவாகச் சாப்பிட்டு வரலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Green Moong dal recipes in tamil: how to prepare Pachai Payaru Masiyal

 Green Moong dal recipes in tamil: பச்சைப் பயறு மிகவும் பிரபலமான சைவ சூப்பர்ஃபுட்களில் ஒன்றாகும். உங்கள் உணவில் பச்சைப் பயறை தவறாமல் சேர்த்துக்கொள்வது பல அதிசயங்களைச் செய்யும். இவற்றில் புரதச்சத்து அதிகளவு காணப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடல் எடையை குறைக்கிறது.

Advertisment

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பச்சைப்பயறை ஒரு நேர உணவாகச் சாப்பிட்டு வரலாம்.

இந்த அற்புத பயறில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது நமது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் தசைப்பிடிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

வயிற்றுப்புண் பாதிப்பால் அவதிப்படும் மக்களுக்கு பச்சைப் பயறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

publive-image
பச்சைப்பயறு

இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள பச்சைப் பயறில் டேஸ்டியான மசியல் எப்படி தயார் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்

பச்சைப்பயறு மசியல் தயார் செய்யத் தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 4
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

publive-image
பச்சைப்பயறு மசியல்

பச்சைப்பயறு மசியல் செய்முறை

முதலில் பூண்டுப் பல்லைத் தோலுடன் இடித்துக்கொள்ளவும். பிறகு தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதில் பச்சைப்பயறு, இடித்த பூண்டு, தக்காளி, வெங்காயம், மஞ்சள் தூள், சிறு துண்டுகளாக உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவிடவும்.

பருப்பு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். உப்பை கடைசியில்தான் சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால், பருப்பு வேகாது என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்ளவும்.

தொடர்ந்து, தாளிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து மசியலில் சேர்க்கவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் சுவையான பச்சைப்பயறு மசியல் தயராக இருக்கும். அவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசிக்கலாம்.

publive-image
பச்சைப்பயறு மசியல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Healthy Food Tamil Food Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment