Advertisment

நீரிழிவை தடுக்கும் கொய்யா இலை: இவ்வளவு நன்மை இருக்கா?

Top benefits of koyya leaf or guava leaves and guava leaf tea benefits in tamil: நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் உதவும் குறிப்பிட்ட சுகாதாரப் பயன்பாடுகளுக்கான உணவுகளில் ஒன்றாக கொய்யா இலை தேநீரை ஜப்பான் அரசு அங்கீகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
guava leaves benefits tamil: guava leaves for diabetes in tamil

Guava  leaf  benefits in tamil: நமது ஊர்களிலும், வீடுகளிலும் மற்றும் தோட்டங்களிலும் வளர்க்கப்பட்டு வரும் மரவகைகளில் ஒன்றாக கொய்யா மரம் உள்ளது. இவற்றின் இலை முதல் பழம் வரை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகவே உள்ளன. குறிப்பாக, கொய்யா இலைகளில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அறிந்தால் நீங்கள் வாயடைத்துப் போவீர்கள். அந்த அளவுக்கு ஏராளமான பலன்களை உள்ளடக்கிய ஒன்றாக இவை உள்ளன.

Advertisment

கொய்யா மற்றும் கொய்யா இலைகளின் அற்புத பயன்கள்:

கொய்யாவில் வைட்டமின் -சி, ஆண்டிஆக்ஸிடண்ட், நார்ச்சத்து, பொட்டாசியம் என சத்துகள் செறிந்துள்ளன. இவற்றில் உள்ள வைட்டமின் -சி, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டி நோய்களிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கொய்யாவை சாப்பிட்டு வர, நம் உடலுக்கு தேவையான வைட்டமின்-சி முழுமையாக கிடைக்கும்.

கொய்யாவில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் உள்ளதால், நீரழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கொய்யாவில், நார்சத்து மிகுந்து காணப்படுவதால் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக அமைவதோடு, செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது.

publive-image

வைட்டமின் -சி சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படுவதால், கதிரியக்கத்திலிருந்து உடலை தற்காத்துக் கொள்ளவும், சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இதிலுள்ள லைகோபீன் சில வகையான புற்றுநோயிலிருந்து நம்மை காப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொய்யாவை அதன் தோலை நீக்காமல் சாப்பிட்டு வந்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.

கொய்யா மட்டுமல்லாது, கொய்யா இலையும் பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. கொய்யா இலையில், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. மேலும், வயிற்றுப் போக்குக்கு நல்ல மருந்தாக கொய்யா இலை உள்ளது.

கொய்யா இலைகளில் தயார் செய்ய தேநீர் கொலஸ்ட்ரால் அளவைகுறைக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் உதவும் குறிப்பிட்ட சுகாதாரப் பயன்பாடுகளுக்கான உணவுகளில் ஒன்றாக கொய்யா இலை தேநீரை ஜப்பான் அரசு அங்கீகரித்துள்ளது.

publive-image

இந்த தேநீரில் உள்ள கலவைகள் உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் என்கிற இரண்டு வகையான சர்க்கரைகளை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, கொய்யா இலை தேநீர் செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பல்வேறு நொதிகளைத் தடுக்கிறது, இது உங்கள் இரத்தத்தில் உறிஞ்சுவதை மெதுவாக்கும் என்று கூறுகிறது.

கொய்யா இலைகள், சிக்கலான மாவுச்சத்துகள் சர்க்கரையாக மாறுவதைத் தடுப்பதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது. இதற்கு, கார்போஹைட்ரேட்டுகளை உடலால் பயன்படுத்த கல்லீரலில் உடைக்க வேண்டும். மற்றும் கொய்யா இலைகள் கார்போஹைட்ரேட்டுகள் பயன்படுத்தக்கூடிய கலவைகளாக மாறுவதைத் தடுக்கும்.

இதையும் படியுங்கள்: தினமும் இரவில் தண்ணீருடன் 15ML: சுகர் பிரச்னைக்கு இந்த தீர்வை கவனித்தீர்களா?

கொய்யா இலை தேநீர் செரிமான நொதியின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. வலுவான பாக்டீரியா எதிர்ப்பு முகவர்கள் குடலின் புறணியில் பாக்டீரியாவைக் கொன்று, பாக்டீரியாவால் நச்சு நொதிகளின் பெருக்கத்தை நிறுத்துகின்றன.

publive-image

கொய்யா இலைகள் முக்கியமாக உணவு விஷம் மற்றும் தணிப்பு, வாந்தி மற்றும் குமட்டல் போன்றவற்றில் பயனுள்ளதாக இருக்கும். வயிற்று வலியைப் போக்க, 6-7 கொய்யா இலைகளை 1.5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கவும்.

கொய்யா இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கின்றன. இது பொதுவாக சருமத்தை சேதப்படுத்தும். இந்த வழியில், இது உங்கள் சருமத்தை வயதானதிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் சருமத்தின் தொனி மற்றும் அமைப்பை மேம்படுத்துகிறது. வளர்ந்த கொய்யா இலைகளின் கஷாயத்தை தோலில் தடவினால் சருமம் இறுக்கமாகும்.

கொய்யா இலைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனால் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. கொய்யா இலைகளை உங்கள் தலைமுடியில் தடவினால், அவை மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும், மேலும் அதன் அளவையும் அதிகரிக்கும்.

publive-image

கொய்யா இலை தேநீர் நுகர்வு விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே இது கருத்தரிப்பதற்கும் உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Healthy Food Guava Health Benefits Guava Leaf Benifits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment