Health benefits of Coriander in Tamil: நாம் அன்றாடம் உணவுகளில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்கள், நமக்கு சுவை அளிப்பதோடு, அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன. அத்தகைய மசாலாப் பொருட்களில் ஒன்றான கொத்தமல்லியின் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
கொத்தமல்லி அல்லது தனியா இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மசாலாப்பொருள் இல்லாமல் எந்த சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. இது ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு உணவையும் மகிழ்விக்கும். மேலும், இது சுவை அளிப்பதோடு, மருத்துவ குணங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
கொரோனா வழிகாட்டுதல்களில், ஆயுஷ் அமைச்சகம் கொத்தமல்லியை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொத்தமல்லி சிறந்தது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகின்றன.
நச்சுக்கள் வெளியேற்றம்
கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.
எடை இழப்பை அதிகரிக்கிறது
கொத்தமல்லியில் மகத்தான செரிமான பண்புகள் உள்ளன, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
இதையும் படியுங்கள்: பி.பி, சுகர், இரத்த சோகை… இத்தனை பிரச்னைகளுக்கு ‘பை’ சொல்லும் பழம்!
ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சி
கொத்தமல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் தலைமுடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும்.
சரும பராமரிப்பு
கொத்தமல்லி முகப்பரு, தோல் நிறமி மற்றும் தழும்புகளை குறைக்கிறது. கொத்தமல்லியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, மேலும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால் முழுமையான ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.
கொத்தமல்லி நீர் செய்வது எப்படி?
கொத்தமல்லி நீரைத் தயாரிக்க, 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை 1 கப் நீரில் இரவில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், விதைகளை வடிகட்டி, வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil