ஊறவைத்த பாதாம்… காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடணும்!

Health benefits of soaked almonds and walnuts in tamil: "காலை வேளையில் ஹெவியான உணவுகளை தவிர்த்து விட்டு, ஊறவைத்த பாதாம் மற்றும் வால்நட் பருப்புகளை கொண்ட லேசான மற்றும் சத்தான உணவுகளுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்" என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பாத்ரா குறிப்பிட்டுள்ளார்.

Health benefits of soaked almonds and walnuts in tamil: "காலை வேளையில் ஹெவியான உணவுகளை தவிர்த்து விட்டு, ஊறவைத்த பாதாம் மற்றும் வால்நட் பருப்புகளை கொண்ட லேசான மற்றும் சத்தான உணவுகளுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்" என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பாத்ரா குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Health tips in tamil: benefits of eating soaked almonds and walnuts empty stomach tamil

Health tips in tamil: ஊட்டச்சத்துக்களை அள்ளித்தருவதில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் நிச்சயம் மிகையாகாது. நீங்கள் உங்கள் நாளை சில பாதம் பருப்புகளுடன் தொடங்கலாம். இவை உங்களது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் வழங்குகின்றது. மேலும் ஊறவைத்த சில பாதாம் பருப்புகளை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பாத்ரா.

Advertisment

"நாம் நம்முடை காலை வேளையை சுறுசுறுப்பாக தொடங்கினால் அந்த நாள் முழுதும் நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடியும். எனவே நம்முடைய காலைப்பொழுதை புதியதாக, மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமாக தொடங்குவது முக்கியம். எனவேதான் என்னுடைய காலை நேரத்தை தொடங்கும் போது நான் சில பருப்பு வகைகளுடன் தொடங்குவேன். அவை நான் நாள் முழுதும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

எளிமையான சொற்களில் கூற வேண்டும் என்றால், காலையில் ஹெவியான உணவுகளை தவிர்த்து விட்டு ஊறவைத்த பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளை கொண்ட லேசான மற்றும் சத்தான உணவுகளுடன் தங்கள் நாளைத் தொடங்க வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

ஊறவைத்த பாதாம்

publive-image

பாதாம், காலையில் வெறும் உட்கொண்டால், உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் இவற்றில் புரதம், வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. மேலும், தோலில் டானின்கள் இருப்பதால் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுப்பதால் ஊறவைத்த பாதாம் சிறந்தது.

ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் (வால்நட்ஸ்)

publive-image

அனைத்து பருப்புக்களுக்கும் அரசனான வால்நட் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதால் அவை "மூளை உணவு" என்றும் அழைக்கப்படுகின்றன.

மேலும், அக்ரூட் பருப்புகள் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும். அக்ரூட் பருப்புகளை ஊறவைப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

"உங்கள் காலை வேளையை இது போன்ற பருப்புகளுடன் ஆரம்பித்து, உங்கள் நாளை சக்தி மற்றும் ஆற்றலுடன் எதிர்கொள்ளுங்கள்" என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பாத்ரா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Food Tips Tamil Health Tips Lifestyle Healthy Life Healthy Food Tamil News 2 Almonds Benefits Of Almonds

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: