பி.பி-யை குறைக்கும் ஓமம் நீர்: எப்போ சாப்பிடணும்; எப்படி சாப்பிடணும்?

ajwain / omam water recipe health benefits in tamil: ஓம தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை நம் உடலுக்கு அளிக்கின்றன.

healthy drinks in tamil: omam water benefits and making in tamil

Tamil Health tips: உலகெங்கிலும் உள்ள பலரைப் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக உயர் இரத்த அழுத்தம் மாறிவிட்டது. இது இதய நோய் மற்றும் கடுமையான நிகழ்வுகளில் பக்கவாதம் போன்ற பிற இருதய நோய்களுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் சில உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யலாம்.

இரத்த அழுத்த நோயாளிகளுக்கென அன்றாட பல சமையல் குறிப்புகள் மற்றும் உணவுப்பட்டியல்கள் இணைய பக்கங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும், இரத்த அழுத்தத்தை குறைக்க உப்பு மற்றும் காரமான உணவுகளை விலக்குதல் நல்ல பயனளிக்கும் என்றும், ஓமம் தண்ணீரை உட்கொள்வது உயர்ந்த இரத்த அழுத்த அளவுகளுக்கு அதிசயங்களைச் செய்யலாம் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு ஓமம் தண்ணீர் ஏன்?

இரத்த அழுத்தத்திற்கான ஓமம் தண்ணீரின் ஆரோக்கிய நன்மைகள் இந்திய மசாலாப் பொருட்கள் ஆக்ஸிஜனேற்றத்தின் களஞ்சியமாகும். மேலும் அவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை நம் உடலுக்கு அளிக்கின்றன.

ஓம இலைகளில் தைமால் உள்ளது. இது ஒரு அத்தியாவசிய எண்ணெயாகும், இது மசாலாவிற்கு ஒரு தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தை அளிக்கிறது. மேலும், தைமால் எடை இழப்பு, ஆரோக்கியமான செரிமானம் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒட்டுமொத்தமாக இருதய அமைப்புக்கு நன்மை பயக்கும்.

ஓமம் ஆண்டிஹைபர்டென்சிவ் மற்றும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. உங்கள் அன்றாட உணவில் ஓமத்தை சேர்த்துக்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிசயங்களைச் செய்யும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் போது சற்று காரமாக இருப்பதால், அவற்றை தண்ணீரின் வடிவத்தில் எடுத்துக்கொள்வது சிறந்தது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு ஓமம் தண்ணீர் செய்வது எப்படி?

ஓமம் தண்ணீர் தயாரிக்கும் செயல்முறை மிகவும் எளிதான மற்றும் எளிமையான செயல்முறையாகும்.

ஒரு டீஸ்பூன் உலர்ந்த வறுத்த ஓமம் விதைகளை ஒரு கப் தண்ணீரில் ஒருநாள் இரவு முழுதும் ஊற வைக்கவும்.

மறுநாள் தண்ணீரைக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

அவை குளிர்ந்ததும் பருகி மகிழவும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் எடுத்துகொள்ளவது மிகவும் நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy drinks in tamil omam water benefits and making in tamil

Next Story
ஆப்பிள், பீட்ரூட், கேரட்… இந்த ABC ஜூஸ் மகத்துவம் தெரியுமா?ABC Juice Recipe tamil: How to Make ABC Juice in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com