bottle gourd juice benefits in tamil: நம்மில் பெரும்பாலோர் ஒரு கப் தேநீர் அல்லது காபியுடன் நம் நாளைத் தொடங்குவது வழக்கம். ஆனால், நமது நாளை ஒரு கிளாஸ் புதிய காய்கறி சாற்றுடன் தொடங்குவது மிகவும் நல்லது என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் அதிகம் கொடுக்கும் எனவும், மற்ற உடல்நலப் பிரச்சினைகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் டயட்டீஷியன் மான்சி படெச்சியா சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில் காய்கறியில் எப்படி ஜூஸ் தயாரிப்பது என்றும், அதற்கான செய்முறையையும் வழங்கியுள்ளார். மேலும், "ஒரு ஆரோக்கியமான பச்சை காய்கறி சாறுடன் உங்கள் நாளைத் தொடங்குவது ஆற்றல் பெற ஒரு சிறந்த வழியாகும்," என்று அவரது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சுரைக்காய் ஜூஸ் தேவையான பொருட்கள்
நறுக்கப்பட்ட சுரைக்காய்
வெள்ளரிக்காய்
செலரி
புதினா இலைகள்
எலுமிச்சை சாறு
சீரக தூள்
உப்பு
சுரைக்காய் ஜூஸ் செய் முறை
ஒரு பிளெண்டர் ஜாடியில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். அவற்றை நன்கு அரைத்து வடிகட்டவும். பின்னர் அவற்றை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகி மகிழவும்.
இந்த காய்கறிச் சாறு பல நன்மைகளை உள்ளடக்கியுள்ளதாக டயட்டீஷியன் மான்சி படெச்சியா தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவற்றை இங்கு பார்க்கலாமா!
*இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது: உடலையும் கல்லீரலையும் நச்சுத்தன்மை இல்லாமல் ஆக்குகிறது. மேலும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.
*இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை கண்களின் செயல்பாட்டிற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் உதவுகின்றன.
*இந்த காய்கறி சாறு உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் கல்லீரலில் இருந்து பித்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் இவைஇதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
*இந்த சாறு உங்கள் பித்தத்தையும் பலப்படுத்துகிறது. கொழுப்புகளை உடைக்க வலுவான பித்தம் முக்கியம்; உடலில் இருந்து கழிவுகளை அகற்றவும் இது தேவைப்படுகிறது.
நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே மக்களே!!!
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil