Advertisment

காலையில் குங்குமப்பூ தண்ணீர்… இவ்வளவு பலன் இருக்கு!

health benefits and tips to make Kungumapoo water or saffron water or kesar ka paani tamil: குங்குமப்பூ தண்ணீரைக் குடிப்பதால், சருமத்தின் தன்மையை மேம்படுத்தலாம், இயற்கையாகவே ஒளிரச் செய்யலாம். மேலும் முகப்பரு வடுக்கள் மற்றும் பிற கறைகளைப் போக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy drinks tamil: boost your immunity with saffron water or kesar ka paani

Healthy drinks tamil: நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இன்றியமையா ஒன்றாக உள்ளது. இவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் நம்மில் பலர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வலிமையை பராமரிக்கவும் பல வழிகளைத் தேடி இருப்போம்.

Advertisment

இதில் நமக்கு உதவக்கூடிய புதிய விஷயங்களை முயற்சித்திருப்போம். அந்த வகையில் குங்குமப்பூ தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஓர் அற்புத பானமாக இருக்கிறது.இவை சுவையானது மட்டுமல்ல, சருமத்திற்கும் சிறந்தது என்றும் நம்பப்படுகிறது. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் முகத்திற்கு ஆரோக்கியமான பொலி கிடைக்கும்.

publive-image

குங்குமப்பூ தண்ணீரைக் குடிப்பதால், சருமத்தின் தன்மையை மேம்படுத்தலாம், இயற்கையாகவே ஒளிரச் செய்யலாம். மேலும் முகப்பரு வடுக்கள் மற்றும் பிற கறைகளைப் போக்கலாம்.

காலையில் குங்குமப்பூ தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக காஃபின் ஃபிக்ஸ் தேவைப்படுபவர்களுக்கு இது அற்புதம் செய்யும். மேலும், இவை ஆரோக்கியமான பானமாக, நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடனும், அதிக கவனத்துடனும் உணர வைக்கும். நீங்கள் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் போது இவற்றை நிச்சயம் ஒரு முறை முயற்சிக்கலாம்.

குங்குமப்பூவில் சில ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது உங்கள் முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் முடியை ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும், நுண்ணறைகளை வலுப்படுத்துகிறது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? என்றால் குங்குமப்பூ தண்ணீரை முயற்சித்துப் பார்க்கலாம்.

publive-image

முன்பு கூறியது போல் குங்குமப்பூ சுவைக்கு நல்லது. எனவே, உங்களுக்கு சர்க்கரை பசி இருந்தால், தேவையற்ற, கூடுதல் எடையை சேர்க்கக்கூடிய சர்க்கரை உணவுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, ஒரு கிளாஸ் குங்குமப்பூ தண்ணீர் பருகலாம். இது மிகவும் ஆரோக்கியமான முறையில் உங்கள் பசியைப் போக்க முடியும். உண்மையில், காலையில் குங்குமப்பூ தண்ணீரை முதலில் குடிப்பது நல்லது.

மாதவிடாய் வலி, மற்றும் லேசான ஓட்டத்தால் அவதிப்படுபவர்களுக்கு, குங்குமப்பூ நீர் நிச்சயம் உதவும். இது வலியைக் குறைக்கும் மற்றும் சரியான ஓட்டத்தை உறுதிசெய்யும். இருப்பினும், உங்கள் மருத்துவரிடம் நீங்கள் பரிசோதிப்பது நல்லது.

குங்குமப்பூ தண்ணீர் எப்படி தயார் செய்வது?

publive-image

குங்குமப்பூ தண்ணீர் தயாரிப்பது ஒரு எளிய செயல்முறை ஆகும்.

இவற்றுன் ஒரு சில இழைகளை எடுத்து 10 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்கவும்.

அதன் பிறகு, நீங்கள் அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் மேலே நாம் குறிப்பிட்ட ஆரோக்கிய பயன்களை பெறலாம்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Health Healthy Food Tips Tamil Health Tips Health Tips Lifestyle Healthy Life Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment