காலையில் வெறும் வயிற்றில்… இந்த 3 முக்கிய உணவை மறக்காதீங்க!

Top 3 gut-friendly drinks in tamil: துளசி தேநீர் என்பது புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது வாய் துர்நாற்றத்தை விரட்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Top 3 gut-friendly drinks in tamil: துளசி தேநீர் என்பது புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது வாய் துர்நாற்றத்தை விரட்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Healthy drinks tips: these 3 drinks an Empty Stomach will help gut health

Healthy drinks tips: நமது உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் நமது வயிறு மற்றும் குடலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குடலுடன் தொடர்புடைய பிரச்சனைகள் தினசரி வழக்கத்தில் மாறுதல்களை ஏற்படுத்தலாம். இவற்றை சமாளிக்க நமக்கு கடினமாக இருக்கலாம் மற்றும் நாள் முழுவதும் உங்களை நீங்கள் சங்கடமாக உணரலாம்.

Advertisment

அத்தகைய சூழ்நிலையில், உங்கள் அன்றாட வழக்கத்தில் சரியான வகை உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் குடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யலாம். மேலும், நீங்கள் உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பானங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி நீங்கள் அன்றாட காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய 3 பானங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

publive-image

எலுமிச்சை தண்ணீர்

எலுமிச்சை தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளுடன் நிரம்பியுள்ளது. இவை அதிகாலையில் தயார் செய்ய எளிதான பானங்களில் ஒன்றாகும்.

Advertisment
Advertisements
publive-image
எலுமிச்சை தண்ணீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அதில் அரை எலுமிச்சையை பிழியவும். நீங்கள் அதை இனிமையாக்க மற்றும் நன்மைகளை சேர்க்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

இது வைட்டமின் சியின் நல்ல அளவை வழங்குகிறது. உடலின் pH அளவை சமன் செய்கிறது, செரிமான சாறுகளின் சுரப்பை மேம்படுத்துகிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

இஞ்சி தேநீர்

இஞ்சி தேநீர் தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் அது பல்வேறு வழிகளில் உங்களுக்கு பயனளிக்கும்.

வெறும் வயிற்றில் இஞ்சி டீ சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்தும், குமட்டலைத் தணிக்கும் மற்றும் தொண்டை அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

1 அங்குல துருவிய இஞ்சியுடன் 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். சுமார் 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது தேநீரை வடிகட்டி, சூடாக இருக்கும் போது குடிக்கவும். இஞ்சியின் சுவை அதிகமாக இருந்தால் அரை ஸ்பூன் தேன் சேர்க்கலாம்.

publive-image
இஞ்சி தேநீர்

துளசி நீர்

ஒரு பாத்திரத்தில் 1½ கப் தண்ணீர் சேர்க்கவும். 5-6 துளசி இலைகளை அதில் இட்டு கொதிக்க வைக்கவும். இப்போது தேநீர் ஒரு கோப்பையாக குறையும் வரை கொதிக்க விடவும். வடிகட்டிய பின் சூடாக குடிக்கவும்.

publive-image
துளசி தேநீர்

துளசி தேநீர் என்பது புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது வாய் துர்நாற்றத்தை விரட்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Food Tips Tamil Health Tips Health Tips Lifestyle Healthy Life Healthy Food Tamil News 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: