healthy food Tamil News: குளிர்காலத்தை நெருக்கி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நாம் சரியான உணவுகளை தெரிவு உண்பது முக்கியமான ஒன்றாகும். இந்த பருவத்தில் தான் பலவிதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் புதிதாகக் கிடைக்கும். அவற்றை சரியான அளவில் நாம் எடுத்துக்கொண்டால் நமக்கு நிறைய பயன்கள் கிடைக்கும்.
இந்த குளிர்காலத்தில் நமக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு உதவ, பைரிடாக்சின் என்று அழைக்கப்படும் வைட்டமின் பி6 நிறைந்த ஏழு உணவுப் பொருட்களின் பட்டியலை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த வைட்டமின் பொதுவாக சில உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கிறது.
வைட்டமின் B6 பல நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கவும், உடலில் புரதங்களை திறம்பட பயன்படுத்தவும் நமக்கு உதவுகிறது.
1.கேரட்
வைட்டமின் பி6 நிறைந்த சூப்பர் காய்கறிகளில் கேரட் -டும் ஒன்றாகும். இவை குளிர்காலத்தில் எளிதாகக் கிடைக்கும். ஒரு நடுத்தர கேரட் ஒரு கிளாஸ் பாலைப் போலவே வைட்டமின் பி6 ஐ வழங்குகிறது. கூடுதலாக, கேரட் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றின் சிறந்த மூலமாகவும் உள்ளது.
2.பால்
பால் உடலில் வைட்டமின் B6 இன் நல்ல மூலமாகும். அன்றாட பால் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அனைத்து வயதினருக்கும் பரிந்துரைக்கப்படும் பொருட்களில் பாலும் ஒன்றாகும்.
3.வாழைப்பழம்
உடல் எடையை அதிகரிக்க விரும்பும் மக்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் பி6 தவிர, வாழைப்பழம் பல்வேறு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துகளையும் வழங்குகிறது.
4.கீரை
இந்த அற்புதமான பச்சை இலைக் காய்கறியில் இரும்பு, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. இவற்றை குளிர்காலத்தில், உங்கள் தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் நிறைய ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
5.கோழி கல்லீரல்
வைட்டமின் பி6 தவிர, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருளாக கோழி கல்லீரல் உள்ளது. மேலும், இந்த உணவுப் பொருள் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
6.முட்டை
குளிர்காலத்தில் நமது உடலை சூடாக வைத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, அவை ஆரோக்கியமானது என்பதாலும் முட்டைகளை சாப்பிடுகிறோம். ஆம்லெட்டாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம். விருப்பமான காலை உணவு விருப்பங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
7.பச்சை பட்டாணி
குளிர்கால மாதங்களில் பரவலாக கிடைக்கும் மற்றொரு காய்கறி பச்சை பட்டாணி. இது நல்ல அளவு வைட்டமின் பி-6 சப்ளை செய்கிறது மற்றும் அவை பல்துறை திறன் கொண்டவையாகவும் உள்ளது.
பச்சை பட்டாணியை சாலட்களில் அல்லது கேரட் அல்லது உருளைக்கிழங்குடன் வதக்கிய சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.