கேரட், சிட்ரஸ் பழங்கள், இஞ்சி… ரத்த ஓட்டம்- ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் உணவுகள்!

Best Foods for Blood Circulation and to increase oxygen in tamil Tamil News: இரத்த ஓட்டம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அறியப்பட்ட இந்த ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்கவும்.

Healthy food Tamil News: Best Foods for Blood Circulation and to increase oxygen in tamil

Healthy food Tamil News: சத்தான உணவு உங்கள் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களுக்கும் உணவளிப்பது மற்றும் நோய்களைத் தடுப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலையும் அதன் உறுப்புகளையும் நன்கு வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தைப் போல செயல்பட வைக்கிறது.

அந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் கலந்த உணவுகளை உங்கள் உடலுக்குத் தேவையான இடத்திற்கு கொண்டு செல்வதில் உங்கள் இரத்த ஓட்டம் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த வகை ஆரோக்கியமான உணவுகள் மருந்து இல்லாமலே உங்கள் இரத்த ஓட்டத்திற்கு உதவும். மேலும் மாரடைப்பு, ஆழ்ந்த சிரை இரத்த உறைவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான நிலைகளைத் தடுக்கவும் அவை உதவும்.

இரத்த ஓட்டம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அறியப்பட்ட இந்த ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்கவும்.

சரி, இப்போது அந்த உணவுகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போமா!…

பாதம் பருப்பு

பாதம் பருப்பு ஒரு சரியான ஒளி சிற்றுண்டி ஆகும் இது சாலட் வகைகளில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. பாதாம் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிரம்பியுள்ளது, மேலும் அவற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் உள்ளன. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வில் பாதாம் நிறைந்த உணவு கண்டறியப்பட்டது.

வாழைப்பழங்கள்

பொட்டாசியம் நிரம்பிய வாழைப்பழங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன. உங்கள் உணவில் அதிக அளவு சோடியம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் பொட்டாசியம் சிறுநீரகங்களுக்கு உங்கள் உடலில் இருந்து கூடுதல் சோடியத்தை அகற்ற உதவுகிறது. மேலும் இந்த பொட்டாசியங்கள் உங்கள் சிறுநீரின் வழியாக செல்கிறது. இது இரத்த நாளங்களை தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை இயக்கவும் உதவுகிறன.

கேரட்

பழங்கள் மற்றும் காய்கறிகளால் நிறைந்த உணவுகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதில் கேரட் இருதய ஆரோக்கியத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. கேரட் ஜூஸ் தினசரி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறைகிறது என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவை மொத்த ஆக்ஸிஜனேற்ற நிலையை அதிகரிப்பதன் மூலம் இருதய அமைப்பைப் பாதுகாக்கிறது என்றும் கருதப்படுகிறது.

பீட்ரூட்

பீட்ரூட் என்பது நைட்ரேட் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். நைட்ரேட் உங்களுக்கு நல்லது, ஏனென்றால் உங்கள் உடல் அதை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது. இது உங்கள் இரத்த நாளங்களை தளர்த்தி, உங்கள் உடல் முழுவதும் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மற்றொரு பெரிய நன்மை என்வென்றால் பீட்ரூட் சாறு உங்கள் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இரத்த நாளங்களை தளர்த்தவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும் மூலிகை பொருளாக கண்டறியப்பட்டுள்ளது. இது நமது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி ஆரோக்கியமாக இருக்க ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். எனவே வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை உங்கள் உணவில் சேர்ப்பது ஒரு சிறந்த வழியாகும். ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் பல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்கவும், இரத்தக் கட்டியாவதை தடுக்கவும் செய்கின்றன. மேலும் இவை இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகின்றன.

இஞ்சி

இஞ்சி அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளுக்கு ஒரு பிரபலமான மூலிகையாக மாறியுள்ளது. அதே போல் இருதய நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான அதன் திறனுக்கும் மாறிவிட்டது. இஞ்சி இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

மஞ்சள்

இந்த பிரபலமான மசாலா குர்குமின் எனப்படும் கலவை காரணமாக அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. குர்குமின் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை கிக்ஸ்டார்ட் செய்யும் என்று நம்பப்படுகிறது. இது உங்கள் இரத்த நாளங்கள் விரிவடைவதற்கும், உங்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை எளிதாக்குவதற்கும் உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy food tamil news best foods for blood circulation and to increase oxygen in tamil

Next Story
பல்வேறு சிகிச்சைகளுக்காக பூஞ்சை மருந்தாக பயன்படுத்தப்பட்டன – மருத்துவர் விளக்கம்Fungus is friend or foe for human explained Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com