healthy foods Tamil News: கசப்பு தன்னமை கொண்ட காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை நாம் அடிக்கடி தவிர்க்கிறோம். அவ்வாறு செய்வது தவறு என உணவியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். கசப்பான சுவை கொண்ட காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் மிகவும் சத்தானது. பல தாவர அடிப்படையிலான சத்துக்கள் நிறைந்தது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Advertisment
இங்கு நாம் பரிந்துரைத்துள்ள 5 உணவுப்பொருட்கள் கசப்பு தன்மை கொண்டவை. ஆனால் அவற்றின் பயன் எண்ணற்றது. இப்போது அந்த உணவுகள் குறித்து பார்க்கலாம்.
வெந்தயம்
Advertisment
Advertisements
வெந்தயம் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பிற கரையக்கூடிய உணவு நார்ச்சத்துக்களை கொண்ட ஒரு உணவுப்பொருளாகும். அவை ஆரோக்கியத்திற்கு நல்லது. இவை மலச்சிக்கல் பிரச்சனையை தீர்ப்பதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
பச்சை தேயிலை தேநீர் (க்ரீன் டீ)
கிரீன் டீ அனைத்து ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு தேநீர் ஆகும். இது உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன மற்றும் பாலிபினால்கள் இருப்பதால் புற்றுநோய் எதிர்ப்பு செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இலை காய்கறிகள்
கீரை போன்ற இலைக் காய்கறிகள் மிகவும் சத்தானவை மற்றும் ஆரோக்கியமானவை. அவற்றில் இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கு நமக்கு உதவுகின்றன.
பாகற்காய்
பாகற்காய் அனைத்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கூறுகளின் ஆற்றல் மையமாகும். இவற்றை சமைத்தோ அல்லது சாறு வடிவிலோ உட்கொள்வதால், அவற்றின் ஆரோக்கிய மதிப்பு அப்படியே கிடைக்கும்.
டார்க் அல்லது கருப்பு சாக்லேட்
டார்க் அல்லது கருப்பு சாக்லேட் மிகவும் வலுவான சுவை கொண்டது. இருப்பினும், சாக்லேட்டின் மற்ற பதிப்புகளுடன் ஒப்பிடும்போது இது ஊட்டச்சத்து மிக்கது. இதில் துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் உள்ளன. அவை வீக்கத்திலிருந்து விடுபடவும் இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும் உதவுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“