Advertisment

Blood Sugar: ஊறவைத்த பாதாம்... இப்படி சாப்பிட்டா உங்களுக்கு ஹெல்த் கவலையே வேண்டாம்!

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, இளமைத் தோற்றம்… பாதாமில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
almonds benefits tamil: Reasons to have soaked almonds tamil

How to consume almonds in summer in Tamil: பாதாம் பருப்பு சுவையான, சத்தான உணவு என்பதுஅனைவருக்கும் தெரியும். சற்று காஸ்ட்லியானது என்றாலும், அதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளுக்காக, பெரும்பாலானோர், பாதாம் வாங்க செலவிடுவதில் தயக்கம் காட்டுவதில்லை.

Advertisment

இருப்பினும், பாதாமை ஒவ்வொருவரும் உட்கொள்ளும் முறையில் வேறுபாடுகள் உள்ளது. சிலர் இரவில் ஊறவைத்த பாதாமை சாப்பிட விரும்புகிறார்கள், சிலர் அவற்றை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிட விரும்புகிறார்கள்.

பாதாமில் உள்ள நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பாதாம் உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், கோடை காலத்தில் பச்சை பாதாம் பருப்புகளை அதிகமாக உட்கொண்டால், உடலுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, தீங்கு விளைவிக்கும்.

பச்சை பாதாம் உடல் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது மற்றும் கோடை காலத்தில் அவற்றை உட்கொள்வது பித்த தோஷ நிலைக்கு வழிவகுக்கும். எனவே, பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக இரவில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது நல்லது. ஊறவைத்த பாதாம் சத்துக்களை உடலால் எளிதில் கிரகிக்க உதவுகிறது. உடல் உஷ்ணத்தின் அதிகரிப்பு காரணமாக, நீங்கள் கொப்பளங்கள், முகப் பருக்கள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.

கோடையில் செரிமான பிரச்சனைகளும் அதிகரிக்கும், என்பதால் பச்சையாக பாதாம் சாப்பிடுவது இன்னும் தீங்கானது. ஊறவைத்த பாதாம் ஜீரணிக்க எளிதானது மட்டுமல்ல, உடல் சூட்டையும் கட்டுப்படுத்துகிறது. பாதாமை ஊறவைப்பது பித்த தோஷத்தை நீக்குகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள்: சிம்பிள்… இதை ஃபாலோ பண்ணுங்க; அஜீரண பிரச்னை உங்க பக்கமே வராது!

பாதாமை தோல் இல்லாமல் எடுத்துக் கொள்வது நல்லது: இரவில் ஊறவைத்த பாதாமை தோலை உரித்து, காலையில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. பாதாம் பருப்பின் தோலில் டானின் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. எனவே ஊறவைத்த பாதாமின் தோலை நீக்கி சாப்பிடுவது சிறந்தது.

பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்ல தேவையில்லை. மேலும், புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது.

பாதாமில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது, மேலும் பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அவை நாள் முழுவதும் பசியை உணர விடாது.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: பாதாமில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகள் பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

வயதாவதை எதிர்க்கிறது: பாதாமில் வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. ஊறவைத்த பாதாமை தொடர்ந்து உட்கொள்வது உடலில் உள்ள மெல்லிய கோடுகளை குறைப்பதோடு, வயதாவதை குறைக்கவும் உதவுகிறது.

மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Healthy Food Tips Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment