இட்லி சூடு ஆறிய பிறகும் அதே சாஃப்ட்… இந்த 3 விஷயங்களை கவனத்தில் வையுங்க!
How to make soft and Fluffy Idli in tamil: குளிர்ந்த பிறகும் மென்மையாக இருக்கும் பஞ்சுபோன்ற இட்லிகளைப் பெற விரும்பினால், நீண்ட தானிய அரிசியைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
How to make soft and Fluffy Idli in tamil: குளிர்ந்த பிறகும் மென்மையாக இருக்கும் பஞ்சுபோன்ற இட்லிகளைப் பெற விரும்பினால், நீண்ட தானிய அரிசியைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இட்லி இருக்கிறது.
Advertisment
கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலர் சிரம படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி தயார் செய்ய உங்களுக்காவே சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.
பஞ்சுபோன்ற சாஃப்டான இட்லிகளைப் பெற, நீங்கள் இட்லி அரிசியை பயன்படுத்த வேண்டும். அல்லது புழுங்கல் அரிசியைப் பயன்படுத்த வேண்டும். இந்த அரிசிகள் கிடைக்கவில்லை என்றால், குறுகிய அல்லது நடுத்தர தானிய அரிசியைப் பயன்படுத்தலாம்.
குளிர்ந்த பிறகும் மென்மையாக இருக்கும் பஞ்சுபோன்ற இட்லிகளைப் பெற விரும்பினால், நீண்ட தானிய அரிசியைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். எனினும், நீங்கள் புழுங்கல் அரிசியை பயன்படுத்தும்போது அவை இட்லி சமைக்க எளிதாக இருக்கும் மற்றும் இவை அதிக சத்தானதும் கூட.
இட்லிக்கு தண்ணீர் பதமும் முக்கியம் ஒன்றாகும். மாவு புளித்தவுடன் கொஞ்சம் இலகும். எனவே தண்ணீர் அளவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் கிரைண்டர் இல்லை என்றால் மிக்ஸியில் மாவினை அரைக்கலாம். அப்போது குளிர்ந்த நீரை அதில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இட்லி தட்டில் எண்ணெய் தேர்த்து பிறகு மாவினை ஊற்றுங்கள். நன்றாக வெந்த பின்பு, ஷார்ப்பான கரண்டி கொண்டு இட்லியை எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“