/tamil-ie/media/media_files/uploads/2022/02/Immune-Boosting-Foods-Tamil-News.jpeg)
Immunity-Boosting Foods in tamil: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அச்சம் நிலவி வரும் நிலையில், அவற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. மேலும், இந்த குளிர்காலத்தில் காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய் தொற்றுகள் எளிதில் பரவி வருகின்றன. இவற்றுடன் மூட்டுவலி மற்றும் தோல் பிரச்சனைகள் போன்ற சில உடல்நிலை குறைபாடுகளும் நம்மைத் தேடி வருகின்றன.
எனவே, இந்த தருணத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும். அவற்றில் குறிப்பாக, நமது பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்தும் இஞ்சி, மிளகு, பூண்டு, மஞ்சள், வெங்காயம் போன்ற பொருட்களை நம்முடைய அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவற்றைத்தவிர இன்னும் சில உணவுப் பொருட்களும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. அந்த முக்கிய உணவுகள் குறித்து இங்கு ஒன்றன் பின் ஒன்றாக பார்க்காலம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Immunity-1.jpg)
கீரைகள் மற்றும் கிழங்கு வகைகள் (பீட்டா கரோட்டின்)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-01T171816.511.jpg)
பசலைக்கீரை, கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற உணவுகளில் இருக்கும் பீட்டா கரோட்டின் ‘வைட்டமின் ஏ’ - யாக மாற்றம் அடையும். இவை வைரஸ் போன்ற நச்சுக்கிருமிகளை எதிர்க்கும் ‘ஆன்டிபாடிகள்’ எனும் ‘நோய் எதிர்ப்பு புரதங்களை’ உற்பத்தி செய்கின்றன.
சிட்ரஸ் பழங்கள் மற்றும் கீரை வகைகள் (வைட்டமின் ‘சி’)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-01T171848.670.jpg)
திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, கீரை வகைகள் போன்றவற்றில் ‘வைட்டமின் சி’ நிரம்பி காணப்படுகிறது. இவற்றை நாம் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கலாம்.
சூரிய ஒளி, மீன் மற்றும் முட்டைகள் (வைட்டமின் ‘டி’)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-01T171936.709.jpg)
நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியமாகும். இது முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள், மீன்கள் போன்ற உணவுகள் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது. தவிர, சூரிய ஒளி மூலமும் வைட்டமின் டி நமக்கு கிடைக்கிறது.
கிரீன் டீ (ஆன்டி ஆக்சிடென்டுகள்)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-01T172020.186.jpg)
கிரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த ஒன்றாக உள்ளது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், கிருமித்தொற்றை தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்கிறது. இதனால் கிருமியின் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கடல் உணவுகள் (ஜிங்க் - துத்தநாகம்)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-01T172129.647.jpg)
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கு முக்கியமான தாது ‘ஜிங்க்’. இது நண்டு, இறால், லாப்ஸ்டர் போன்ற ஓடு இருக்கும் கடல் உணவுகள், விலங்குகளின் இறைச்சி போன்றவற்றில் உள்ளது.
விதைகள் மற்றும் கொட்டைகள் (வைட்டமின் ‘ஈ’)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-01T172212.621.jpg)
கொழுப்பில் கரையும் சத்துக்களின் வகையைச் சேர்ந்த ‘வைட்டமின் ஈ’ பசலைக்கீரை, பாதாம், சூரிய காந்தி விதை போன்றவற்றில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக இயங்கச் செய்கிறது.
புரோபையாட்டிக்ஸ் நொதிக்கவைக்கப்பட்ட உணவுப்பொருட்கள்
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-01T172239.818.jpg)
தயிர், யோகர்ட், ஊறுகாய் மற்றும் நொதிக்கவைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் இருக்கும் ‘புரோபையாட்டிக்’ நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் தன்மை கொண்டது. மேலும் வயிற்றின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் இது உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.