Immunity boosting drinks in tamil: குளிர்காலத்தில் இருக்கும் நாம் நோய்வாய்ப்படுவது ஒன்றும் புதிது அல்ல. இந்த நாட்களில் லேசான காய்ச்சல், தலைவலி போன்ற பாக்ட்டீரியாவால் உருவாகும் நோய்க்கள் நமக்கு அவ்வப்போது ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால், அவற்றுக்கு முறையான மற்றும் ஆரோக்கியமான மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. மேலும், இதுபோன்ற சிறிய பிரச்சனைகளுக்கு சூடான பானங்களை தெரிவு செய்து கொள்வது மிகவும் நல்லது. அதிலும் இயறக்கை பொருட்களால் ஆனா பானங்கள் மிகச் சிறந்தது.
அந்தவ கையில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சில பானங்களை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகினி சோம்நாத் பாட்டீல் இங்கு பரிந்துரை செய்துள்ளார்.
"நம் உடல்கள் ஒரே இரவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; ஒருவர் தங்கள் உணவுப் பழக்கத்தை சமப்படுத்த வேண்டும் மற்றும் ஆரோக்கியமான, வீட்டில் சமைத்த உணவை அவ்வப்போது சாப்பிட வேண்டும். ஆனால் உங்கள் உணவில் சில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்" என்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகினி சோம்நாத் பாட்டீல் கூறுகிறார்.
நோய் எதிர்ப்பு சக்தி தரும் மஞ்சள் கலந்த தேநீர் - Turmeric immunity shot
தேவையான பொருட்கள்
கருமிளகு
வடிகட்டப்படாத ஆப்பிள் சைடர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு
மிதமான சுடு நீர்
மஞ்சள் தூள்
செய்முறை
முதலில் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் சேர்க்கவும். அவற்றை நன்கு கிளறி பிறகு ஒரு டீஸ்பூன் பச்சை ஆப்பிள் சைடர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். இப்போது அவற்றை பருகி மகிழலாம்.
இந்த அற்புத பானத்தின் ஆரோக்கிய நன்மைகள்
மஞ்சள்:
மிகச் சிறந்த மூலப்பொருளாக உள்ள மஞ்சள் குர்குமின் மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மேலும், "இது செரிமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முன்கூட்டிய வயதைக் குறைப்பதன் மூலம் உங்கள் சருமத்திற்கும் அதிசயங்களைச் செய்கிறது." என டாக்டர் பாட்டீல் கூறுகிறார்.
மூல ஆப்பிள் சைடர் வினிகர்:
இது நோய்க்கிருமிகளைக் கொல்லும் என்று அறியப்படுகிறது. மேலும் முந்தைய காலங்களில் காது தொற்று, பேன், மருக்கள் மற்றும் பலவற்றை கிருமி நீக்கம் செய்து சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. மக்கள் இதை பல நூற்றாண்டுகளாக சமையல் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர்.
"ஆப்பிள் சைடர் வினிகர் வறண்ட சருமம் மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நிலைகளுக்கு ஒரு பொதுவான தீர்வாகும். தோல் இயற்கையாகவே சற்று அமிலத்தன்மை கொண்டது. மேற்பூச்சு ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்துவது சருமத்தின் இயற்கையான pH ஐ மீண்டும் சமநிலைப்படுத்தவும், சருமத்தின் பாதுகாப்புத் தடையை மேம்படுத்தவும் உதவும்." என ஊட்டச்சத்து நிபுணர் மேலும் குறிப்பிடுகிறார்.
கருப்பு மிளகு:
இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம், இந்த பல்துறை மசாலா அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கதா அல்லது மூலிகை தேநீர் - Immunity booster kadha or herbal tea
தேவையான பொருட்கள்:
5-6 - புதிய துளசி இலைகள் / 2 தேக்கரண்டி - துளசி தூள்
1/2 அங்குலம் - துருவிய இஞ்சி / இஞ்சி தூள் / சாந்த்
1 தேக்கரண்டி - அஜ்வைன்
1 தேக்கரண்டி - ஏலக்காய் தூள்
1/2 தேக்கரண்டி - கருப்பு மிளகு
1 தேக்கரண்டி - இலவங்கப்பட்டை தூள்
1/2 டீஸ்பூன் - மஞ்சள்தூள்
2 தேக்கரண்டி - பச்சை தேயிலை இலைகள்
1 டீஸ்பூன் - ஆர்கானிக்/திரவ/தேங்காய் வெல்லம்
செய்முறை
500 மில்லி தண்ணீரில் அனைத்து பொருட்களையும் சேர்த்து, மிதமான சூட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதை ஒரு கோப்பை அல்லது கண்ணடி டம்ளரில் ஊற்றி சிறிது எலுமிச்சை சாறு பிழிந்துகொள்ளவும். பிறகு அவற்றை நீங்கள் பருகி மகிழலாம்.
இந்த பானத்தை ஒரு நாளைக்கு 1முதல் 3 முறை வெறும் வயிற்றில் பருக முயற்சிக்கவும்.
நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை தேநீர் அல்லது கதாவின் ஆரோக்கிய நன்மைகள்
இந்த அற்புத பானம் பல்வேறு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளது. மேலும் இந்த மூலிகைக் கலவை டிகாஷன் உங்களை புத்துணர்ச்சி பெறச் செய்கிறது.
இந்த பானம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், குடல் ஆரோக்கியத்தை குணப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவுகிறது. இது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, காய்ச்சல், சளி மற்றும் பல போன்ற சுவாச நோய் அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.