scorecardresearch

முருங்கை இலை, நெல்லி… இம்யூனிட்டிக்கு பெஸ்ட்; எப்படி சாப்பிடுவது?

Build Your Immunity to Fight Covid with Amla and Moringa leaves Tamil News: முருங்கை இலை – நெல்லி கனி பானம், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து போராடவும் உதவுகின்றன.

Immunity boosting drinks Tamil News: Build Your Immunity to Fight Covid with Amla and Moringa leaves

Immunity boosting drinks Tamil News: இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான சிறந்த வழி, நம்மைப் பயிற்றுவிப்பதன் மூலமும், சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதும் ஆகும்.

மேலும் முகமூடியை அணிந்துகொள்வதும், சமூக தூரத்தை பராமரிப்பதும் நம்மை மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு முக்கியமான படியாகும். இருப்பினும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப்பர் ஃபுட்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதும் முக்கியமான ஒன்றாகும்.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கடினப்பட்டு சில உணவுகளை தேர்ந்தெடுக்க தேவையில்லை. அவற்றுக்கு இங்கு நாம் பார்க்கவுள்ள சில உணவு பொருட்களே போதுமானது. மேலும் இந்த உணவு பொருட்கள் நம்முடைய வீடுகளில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளன.

அந்த வகையில் இங்கு நாம் பார்க்கவுள்ள முருங்கை இலை – நெல்லி கனி பானம், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து போராடவும் உதவுகின்றன.

தேவையான பொருட்கள்

1/2 டீஸ்பூன் முருங்கை இலை தூள் அல்லது முருங்கை இலைகள்
1 அம்லா அல்லது நெல்லிக்கனி
1/2 கண்ணாடி டம்ளர் தண்ணீர்

நீங்கள் செய்ய வேண்டியவை

முருங்கை இலை – நெல்லிக்கனி பானம் செய்ய 1/2 டீஸ்பூன் முருங்கை இலை தூள் அல்லது முருங்கை இலைகள் மற்றும் அம்லா அல்லது நெல்லிக்கனியை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரை கிளாஸ் தண்ணீரில் இந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அவற்றை வடிகட்டவும்.

பானத்தை எப்போது பருகலாம்?

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் முருங்கை இலை – நெல்லிக்கனி கபானத்தை பருகலாம். மேலும், ஒருவர் தங்கள் உணவோடு இந்த பானத்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்

அம்லா அல்லது நெல்லிக்காய் பயன்கள்

அம்லா அல்லது நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்து காணப்படும் பொருள் ஆகும். இவற்றை, தொற்றுநோய்களின் போது நிறைய சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இருப்பினும், அம்லா சாக்லேட் அல்லது பவுடர் போன்ற பதப்படுத்தப்பட்ட அம்லா தயாரிப்புகளை எடுக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் பழம் புதியதாக இருக்க வேண்டும்.

முருங்கை இலைகள் பயன்கள்

முருங்கை மர இலைகள் என்றும் அழைக்கப்படும் முருங்கை இலைகள் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். மேலும் அம்லாவுடன் இணைந்தால் அது நம் உடலில் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Immunity boosting drinks tamil news build your immunity to fight covid with amla and moringa leaves