நெல்லி முதல் முருங்கை வரை… நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் 5 சூப்பர் ஃபுட்ஸ்!

From Amla To Moringa 5 Superfoods you must add Tamil News: உங்கள் உணவுப் பழக்க வழக்கங்களும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையும் தான் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிக்கிறது.

Immunity-Boosting Foods in tamil: From Amla To Moringa 5 Superfoods you must add

Immunity-Boosting Foods in tamil: நமது உடலில் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஒன்று அல்லது இரண்டு நாள் செயல்முறை அல்ல. இவற்றுக்கு நிச்சயம் நிறைய நாட்கள் தேவைப்படும். மேலும் உங்கள் உணவுப் பழக்க வழக்கங்களும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிக்கிறது.

உணவுகளின் தேர்வு, செயல்பாட்டு நிலைகள், தூக்கத்தின் தரம்,சுகாதாரம் போன்றவை அனைத்தும் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகுவதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பங்கு மிகப்பெரியது ஆகும். எனவே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த தெரிவு செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும். அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் 5 சூப்பர் உணவுகளை இங்கு பரிந்துரை செய்துள்ளோம்.

  1. அம்லா அல்லது நெல்லிக்கனி

அம்லா அல்லது நெல்லிக்கனி வைட்டமின் சி மிகுந்து காணப்படும் பொருளாக அறியப்படுகிறது. இவை வைட்டமின் அதிகரிக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகும்.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிபாடி மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், நோய்த்தொற்றுகள் காரணமாக உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் நிர்வகிக்க இவை உதவுகின்றன.

நெல்லி பெரும்பாலான ஆயுர்வேத தயாரிப்புகளில் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆக உள்ளது. மேலும் பண்டைய மூலிகை தயாரிப்பில் ஒரு முதன்மை மூலப்பொருளாகவும் இருந்துள்ளது. அதோடு தொற்றுநோய்களைத் தடுக்க உதவும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

நெல்லியின் பயன்கள்

நெல்லிக்கனியை ஊறுகாய், சட்னி, சாறு, சாக்லேட், மற்றும் முராபா போன்ற வடிவங்களில் செய்து பயன் பெறலாம்.

  1. முருங்கை

முருங்கையில் 90 பயோஆக்டிவ் சேர்மங்களும், கிட்டத்தட்ட ஒவ்வொரு வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்களும் உள்ளன என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது ஒரு சக்திவாய்ந்த இயற்கை மல்டிவைட்டமினுக்கு இணையாக உள்ளது. இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, குரோமியம், மெக்னீசியம், செலினியம், துத்தநாகம் ஆகியவை ஏராளமாக உள்ளது மற்றும் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது.

முருங்கை வைட்டமின்கள் பி 1, பி 2 மற்றும் பி 3 ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது செல்லுலார் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது, இதனால் ஒரு சிறந்த ஆற்றல் பூஸ்டராக செயல்படுகிறது.

முருங்கை ஒரு சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருளாகும். இதன் இலைகளில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள், துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

உடலுக்கு குளிர்ச்சியின் தீர்வாக முருங்கை பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக பருகி வரலாம்.

முருங்கையின் பயன்கள்

முருங்கையில் கறி, சூப், சாம்பார், உலர்ந்த தூள், சாறு என பல வடிவங்களில் பயன்படுத்தலாம்.

  1. இனிப்பு உருளைக்கிழங்கு

மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இனிப்பு உருளை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் ஆகும். அவை வைட்டமின் சி, வைட்டமின் பி 5, பி 7 ஆகியவற்றின் வளமான மூலமாகும். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தவிர, நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அவை குடலின் நுண்ணுயிரியத்திற்கு நல்லது. இனிப்பு உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் குடலின் நுண்ணுயிரியை மீண்டும் பயன்படுத்துகின்றன. மேலும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

இனிப்பு உருளைக்கிழங்கின் பயன்கள்

இனிப்பு உருளையில் சூப், பராட்டோ அல்லது சாண்ட்விச் திணிப்பு, வேகவைத்து அல்லது பிசைந்து சாப்பிடலாம்.

  1. மா

ஒவ்வொரு பருவகால பழத்திற்கும் அதன் சொந்த பண்புகள் உள்ளன. குளிர்காலத்தில் வெப்பமயமாதல் உணவுகள், கோடையில் குளிரூட்டும் உணவுகள் மற்றும் மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை இயற்கையாவே கிடைக்கின்றன. கோடைகாலத்திலிருந்து பருவமழைக்கு மாறும்போது மாம்பழங்கள் நமக்கு கிடைக்கின்றன.

வைட்டமின் சி நிறைந்த பழம் தவிர, நுண்ணூட்டச்சத்துக்களில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் டி, பெரும்பாலான பி வைட்டமின்கள் (வைட்டமின் பி 12 தவிர) அடங்கும்.

கூடுதலாக, மாம்பழங்களில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தோல் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான புரதமாகும். இது உடலின் இணைப்பு திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களைப் பாதுகாக்க உதவுகிறது.

மேலும், இதன் மூலம் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கலாம், நெகிழ்ச்சியைத் தூண்டலாம் மற்றும் இயற்கையான வயதான செயல்முறையை குறைக்கலாம்.

மாவின் பயன்கள்

மாம்பழத்தை ஒரு முழு பழமாக உண்ணலாம். தவிர பழச்சாறகவும், சட்னி, பருப்பு குழம்பு மற்றும் கறிகளில் புளிப்பு சேர்க்கவும் இவற்றை பயன்படுத்தலாம்.

  1. பூசணி

ஒரு சலிப்பான காய்கறி என்று பூசணி அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பலரால் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இவற்றில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை வளமான மூலமாக உள்ளன. அவை வைட்டமின்களை அதிகரிக்கும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

வைட்டமின் ஏ அதிக அழற்சி எதிர்ப்பு வைட்டமின் ஆகும். ஏனெனில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதில் அதற்கு முக்கிய பங்கு உள்ளது.

பூசணியின் பயன்கள்

பூசணியில் சூப், காய்கறி, கறி, கூழ், கூட்டு என பல வழிகளில் பயன்படுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Immunity boosting foods in tamil from amla to moringa 5 superfoods you must add

Next Story
90’s டூ 2k கிட்ஸ்… ஆல் டைம் ஃபேவரைட் ஆக்டர்… சத்யா சீரியல் அமுல்பேபி பிரபு லைஃப் ட்ராவல்..sathya serial, prabhu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com