கரும்பில் இருந்து வெல்லம் எப்படி தயாரிக்கிறாங்க தெரியுமா? 9 பயன்கள்

9 Amazing health benefits of jaggery in tamil: வெல்லம் செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுவது முதல் இரத்த சோகை மற்றும் வலியைத் தடுப்பது வரையில் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது.

jaggery benefits tamil: how jaggery is made from sugarcane in tamil

 Jaggery benefits tamil: வெல்லம் வெள்ளை சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்று என்றால் நிச்சயம் மிகையாகாது. இவை நமது வீடுகளில் காணப்படும் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். ஆனால், இது ஒரு சூப்பர்ஃபுட் என்று நம்மில் பலருக்கு தெரியாது. அதுவும் குறிப்பாக குளிர்கால மாதங்களில் மிகச் சிறந்த உணவாக வெல்லம் இருக்கிறது.

வெல்லம் செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுவது முதல் இரத்த சோகை மற்றும் வலியைத் தடுப்பது வரையில் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறது. குளிர்காலத்தில் வெல்லத்தை உட்கொள்வது இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

சமீபத்தில், சமையல் வல்லுநர் குணால் கபூர், கரும்பிலிருந்து வெல்லம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து இருந்தார். மேலும், குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகளையும் அவர் அந்த வீடியோ பதிவில் பகிர்ந்துள்ளார்.

குளிர்காலத்தில் வெல்லம் உட்கொள்வதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்:

  1. உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது.
  2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  3. மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  4. மூட்டு வலியைத் தடுக்கவும் வெல்லம் உதவுகிறது.
  5. உடலை நச்சு நீக்குகிறது.
  6. வெல்லம் சாப்பிடுவதால் மாதவிடாய் வலியையும் குறைக்கலாம்.
  7. வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே, இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.
  8. .சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  9. உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jaggery benefits tamil how jaggery is made from sugarcane in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com