உடல் உஷ்ணத்தை தணிக்கும் வெந்தயக் களி எப்படி செய்யனும் தெரியுமா?
vendhaya kali benefits in tamil: வெந்தயம் ஒரு ஆன்டிசிட்டாக செயல்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மற்றும் சீரண சக்தியை மேம்படுத்துகிறது.
vendhaya kali benefits in tamil: வெந்தயம் ஒரு ஆன்டிசிட்டாக செயல்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மற்றும் சீரண சக்தியை மேம்படுத்துகிறது.
kali recipes in tamil: நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் பல நற்பயன்களையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த அற்புதமான மூலிகையில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு, இரும்பு, சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
Advertisment
வெந்தயம் ஒரு ஆன்டிசிட்டாக செயல்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மற்றும் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இவை கொழுப்பைக் குறைப்பதோடு பித்தம் மற்றும் கபம் அதிகமாக உள்ள நபர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் வலியை போக்கவும் வெந்தயம் உதவுகிறது.
வெந்தயக் களி - தேவையான பொருட்கள் - செய்முறை
Advertisment
Advertisements
புழுங்கல் அல்லது இட்லி அரிசி - 200 கிராம் வெந்தயம் - 50 கிராம்
இவை இரண்டையும் சேர்த்து சுமார் 8 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு மிக்சியில் சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும். இவை நன்கு அரைந்த பிறகு தோசைக்கு மாவு தயார் செய்வது போல தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு கனமான பாத்திரம் எடுத்து அதில் முதலில் 200மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்த பிறகு அரைத்து வைத்துள்ள மாவு சேர்க்கவும். ஒரு கரண்டியால் தொடர்ந்து கிளறவும். முதலில் தனலை அதிகம் வைத்து கிளறவும். மாவு கெட்டியாக வரும் போது மிதமான சூட்டில் வைத்து வேக வைத்து கீழே இறக்கவும்.
இப்போது பனை வெல்லம் அல்லது வெறும் வெல்லத்தை தனியாக நாம் தயார் செய்து வைத்துள்ள வெந்தயக் களியுடன் சேர்த்து சுவைக்கவும்.