Kitchen hacks in tamil: எந்த பருவமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஆண்டு முழுவதும் ஒரு பொதுவான பிரச்சனையை எதிர்கொள்கிறோம். அதுதான் பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நாட்களுக்கு புதியதாக (ஃப்ரஷ்ஷாக) வைத்திருப்பது. நம்மில் பெரும்பாலோர் பழங்கள் மற்றும் காய்கறிகளை மொத்தமாக வாங்குகிறோம்.
இதனால் அவை குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வாடாமல் நீடிக்கும். ஆனால் பெரும்பாலும் இந்த புதிய பொருட்கள் நாம் எதிர்பார்ப்பதற்கு முன்பே பழையதாகிவிடும். இதற்கு காரணம் வானிலை, ஈரப்பதம், தயாரிப்பின் புத்துணர்ச்சி மற்றும் பலவாக இருக்கலாம்.

இவற்றை நீங்கள் குளிர்சாதனப்பெட்டியில் (ஃப்ரிட்ஜில்) வைத்தால், அவை சில நாட்களுக்கு ஃப்ரஷ்ஷாக வைத்திருக்க உதவும். ஆனால் நீங்கள் அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க விரும்பினால், நீங்கள் இந்த எளிய மற்றும் அற்புதமான ஹேக்குகளை பயன்படுத்த வேண்டும். இப்போது அந்த ஹேக்குகளை ஓன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.
ஃப்ரிட்ஜில் காய்கறிகளை நீண்ட நாட்கள் புதியதாக வைத்திருப்பதற்கான ஹேக்குகள்

- குளிர்ந்த நீரில் சேமிக்கவும்
கேரட், செலரி, கீரை மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை ஒரு ஜாடி அல்லது குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனில் சேமிக்கலாம். ஆனால், இந்த காய்கறிகளின் புத்துணர்ச்சியை நீடிக்க, ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் தண்ணீரை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வழியில், உங்களுக்கு தேவையான போது பொருட்களை புதியதாகவும் எளிதாகவும் வைத்திருக்க முடியும்.
- வினிகர் பயன்படுத்தவும்

ஒரு ஜாடி அல்லது ஒரு கொள்கலனில், தண்ணீர் மற்றும் சிறிது வினிகர் சேர்க்கவும். இந்த கலவையில், நீங்கள் எந்த வகையான பெர்ரி, ஆப்பிள்கள், பச்சை வெங்காயம், மிளகுத்தூள், தக்காளி அல்லது பேரிக்காய் ஆகியவற்றை நனைக்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை இந்த கலவையில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும், பின்னர் அதை புதிய தண்ணீரில் கழுவவும். இப்போது. இதை உங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து நீண்ட நாட்கள் சேமிக்கலாம்.
- காகித துண்டில் போர்த்தி அல்லது மடித்து வைத்தல்
காகித பைகள் நாம் அனைவரும் ஏராளமாக வைத்திருக்கும் பொருட்களில் ஒன்றாகும். காய்கறிகளை சேமிக்க இந்த காகித துண்டுகளையும் பயன்படுத்தலாம். இந்த ஹேக் பச்சை இலை காய்கறிகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது. இலைக் காய்கறிகள் சுற்றுச்சூழலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதை காகித துண்டில் போர்த்துவது அதிகப்படியான ஈரப்பதத்தைத் தடுக்க உதவுகிறது.

- உறைய வைத்தல்
குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடிய பழங்கள் அல்லது காய்கறிகள் உங்களிடம் இருந்தால், அவற்றை ஒரு கொள்கலனில் மாற்றி, அவற்றை ஆழமான உறைவிப்பான் பெட்டியில் சேமிக்கவும். இந்த வழியில், அவை அழுகாது, மேலும் அவற்றை நீங்கள் பின்னர் பயன்படுத்தலாம்.
- வேரை வெட்டுங்கள்
டர்னிப், அஸ்பாரகஸ், பச்சை வெங்காயம் போன்ற சில வேர் காய்கறிகள் விரைவில் கெட்டுவிடும். அவை நீண்ட காலம் நீடிக்க, இவற்றின் வேர்களை வெட்டி தண்ணீரில் சேமிக்கவும்.
இந்த எளிதான ஹேக்குகளைப் பயன்படுத்தி மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“