Advertisment

பால் அருந்த சிறந்த நேரம் இதுதான்… நிபுணர்கள் டிப்ஸ்!

good time to drink milk in tamil: பால் தூக்கத்தை தூண்டுகிறது மற்றும் உங்களுக்கு நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
milk benefits in tamil: Best Time To Drink Milk in tamil

milk benefits in tamil: இந்திய உணவுகளில் பால் முக்கிய இடம் வகிக்கிறது என்றால் நிச்சயம் மிகையாகாது. ஏனென்றால் இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவாக உள்ளது. மேலும், வளரும் குழந்தைகளுக்கு பால் ஒரு இன்றியமையாத உணவாகும். இதே போல் வயது முதிந்தோர் அன்றாட பால் அருந்தி வருவது அவர்களின் எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

Advertisment

நீங்கள் வெறுமனே ஒரு கிளாஸ் பால் குடிக்கலாம் அல்லது சில சுவைகளை அவற்றுடன் சேர்த்து ருசிக்கலாம். நம்மில் பெரும்பாலோனார் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பதை விரும்புவோம். ஆனால், சிலரோ இரவு உறங்குவதற்கு முன் பால் அருந்துவார்கள். இதில் எது பால் குடிக்க சரியான நேரம்? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அந்த கேள்விகளுக்கு ஆயுர்வேதத்தின் பதில் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

பால் குடிக்க சிறந்த நேரம் காலையா? மாலையா?

publive-image

இரவில் பால் குடிப்பது ‘ஓஜஸை’ ஊக்குவிக்கிறது. நீங்கள் சரியான செரிமானத்தை அடையும் நிலை தான் இங்கு ஓஜாஸ். ஓஜாஸ் ஆயுர்வேதத்தில் ஒருநிலையாக குறிப்பிடப்படுகிறது. பால் தூக்கத்தை தூண்டுகிறது மற்றும் உங்களுக்கு நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. குறைவான செயல்பாடு காரணமாக, உங்கள் உடல் இரவில் பாலில் இருந்து அதிகபட்ச கால்சியத்தை உறிஞ்சுகிறது.

பால் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

publive-image

பால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் எலும்பு வலிமையை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. இது புரதம், கால்சியம், வைட்டமின் பி 12, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும். தொடர்ந்து பால் குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு அளவு பால் அருந்தலாம்

publive-image

ஒரு நாளில் நீங்கள் 2 முதல் 3 கப் பாலை எளிதாக உட்கொள்ள முடியும் என்றாலும், அதிகப்படியான பால் அருந்துவது மோசமானவை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் பால் முழு கிரீம் என்றால், 1-2 கப் மட்டுமே குடிக்க வேண்டும், ஏனெனில் அது உங்கள் எடையை அதிகரிக்கும். குறைந்த கொழுப்புள்ள பாலை உட்கொள்ளலாம், ஆனால் எப்போதும் அளவோடு இருக்க வேண்டும். நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர் அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த விஷயத்தில், அதிக அளவு பால் பிரச்சனையை உச்சரிக்கலாம்.

பாலின் சுவையை கூட்டு டிப்ஸ்

publive-image

ஆயுர்வேத விதிகளின்படி, மாம்பழம், வாழைப்பழம், முலாம்பழம் மற்றும் பிற புளிப்பு பழங்களை பால் அல்லது தயிருடன் கலக்கக் கூடாது. இத்தகைய பழங்கள் பாலுடன் கலந்தால் இரைப்பையில் அதீத பாதிப்பு எற்படும். இதன் விளைவாக நச்சுக்கள் உண்டாகி, சைனஸ், சளி, இருமல் மற்றும் ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

உங்கள் பாலில் சில இயற்கையான சுவை தரும் இனிப்புகளை சேர்க்கலாம். மேலும், பாலுடன் மஞ்சள் சேர்ப்பது மிகவும் நல்லது. தவிர, பாலின் சுவையை மேம்படுத்த சாக்லேட் பொடிகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Milk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment