கொரோனா பரவலை தடுத்திட மாஸ்க் அணிவது, சமுக இடைவேளி கடைப்பிடிப்பது, சரியான சுகாதாரத்தை பின்பற்றுவது ஆகியவை அவசியமாகும். அதேசமயம், இத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திட சில உணவுகளும், பானங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைரஸ் தொற்றுக்கான வாய்ப்புகளை குறைக்கவும் உதவுகின்றன.
அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும் ஆரோக்கியமான Kadha (கசாயம்) தயாரிக்கும் முறையை ஊட்டச்சத்து நிபுணர் ஜான்வி கனகியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருள்கள்
1 இன்ச் இஞ்சி
ஒன்று அல்லது இரண்டு பீஸ் வெள்ளம்
கருப்பு மிளகுத்தூள்
இரண்டு அஜ்வைன் விதைகள்
3 அல்லது 4 இலவங்கப்பட்டை குச்சிகள்
ஸ்டார் சோம்பு
1 – 2 பீஸ் கருப்பு ஏலக்காய்
1 டீஸ்பூன் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாய் மசாலா
செய்முறை
முதலின் Pan-இல் இரண்டு கிளாஸ் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன், துருவிய இஞ்சி மற்றும் பிற பொருட்களை சேர்க்க வேண்டும்.
பின்னர், தண்ணீர் கருப்பாகும் வரை சுமார் 7 முதல் 10 நிமிடம் கொதிக்க விட்டுவிட வேண்டும்.
பின்னர் பானத்தை வடிகட்டி கப்பில் ஊற்றிவிட்டால் போது. இந்த ஸ்பெஷல் கசாயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.
குறிப்பு: மேலே தெரிவிக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவு இரண்டு சிறிய கசாயங்களை தயாரிப்பதற்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகளவில் தயாரிக்க, பொருள்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.
ஸ்பெஷல் கசாயம் பலன்கள்
கருப்பு மிளகு, கேரம் விதைகள், கிராம்பு, நட்சத்திர சோம்பு மற்றும் ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இவை தொண்டை புண், சளி மற்றும் இருமலைத் தணிக்க உதவும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, உங்கள் செல்களை சேதப்படுத்தும் மற்றும் நோய்க்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடலாம்.
உணவில் இஞ்சியை உட்கொள்வதை அதிகரிப்பது வீக்கத்தை எதிர்த்து உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
வெல்லம் சேர்ப்பது உங்கள் கசாயத்தின் சுவைக்காக மட்டுமல்ல உங்கள் சுவாச அமைப்பையும் சுத்தப்படுத்திறது. மேலும், உடலில் நச்சை நீக்கி, சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடுகிறது.
எப்போது, எத்தனை முறை குடிக்கலாம்?
ஆரோய்க்கியமானது என்றாலும், குறிப்பிட்ட அளவில் பருக வேண்டும். ஒரே நாளில் அதிகளவில் கசாயம் குடிப்பது,அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
சரியாக சொல்லவேண்டுமென்றால், ஒரு நாளில், இரண்டு கப் கசாயம் குடிக்கலாம். நீங்கள் தினமும் அருந்தும் டீ, காப்பீக்கு பதிலாக இதனை முயற்சி செய்து பாருங்கள். சிறந்த முடிவுகளுக்கு, காலையிலும் மாலையிலும் கஷாயத்தை சாப்பிடுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil