Advertisment

விட்டமின் சி நிறைய இருக்கு… அன்னாசிப் பழம் தோலை இனி இப்படி பயன்படுத்துங்க!

Top health benefits of Pineapple Skin Tea (Anti-Inflammatory Tea) in tamil: அன்னாசிப் பழத்தின் தோலில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pineapple skin benefits in tamil: how to make Pineapple Peel Tea making tamil

pineapple skin benefits in tamil: நாம் அன்றாட சாப்பிடும் பழத்தை தின்ற பிறகு அவற்றின் தோலை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், உண்மையில் பழத்தைப் போலவே அதன் தோல்களும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. தற்போது சமையல் உணவு வீணாவதைக் குறைத்தல் போன்ற கருத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், பழக் குப்பைகளாகத் தூக்கி எறியப்படும் இந்த தோல்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா என்று பரவலாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இவற்றை எப்படி பயனுள்ளதாக மாற்றலாம் என்பதற்கான குறிப்புகளும் அன்றாட வெளியிடப்பட்டு வருகிறது.

Advertisment

அத்தகைய சமையல் குறிப்புகளில் ​​அன்னாசிப் பழத்தின் தோலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மிகவும் சுவையான மற்றும் பயனுள்ள அழற்சி எதிர்ப்பு டீ-யும் ஒன்றாகவும். அன்னாசிப்பழத்தின் கரடுமுரடான மற்றும் உறுதியான வெளிப்புற தோல் உங்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்படுவதைத் தவிர்த்து இது போன்ற வேறு பல வழிகளில் பயன்படுத்தப்படலாம்.

publive-image

அன்னாசிப் பழ தோலின் அற்புத பயன்கள்:

அன்னாசி பழத்தின் தோலில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

அன்னாசி பழத்தோலில் காணப்படும் மற்ற மிகவும் பயனுள்ள நொதி ப்ரோமைலைன் ஆகும். இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.

publive-image

கேரள வேளாண் பல்கலைக் கழகம் நடத்திய பல ஆய்வுகளின்படி, "ப்ரோமைலைன் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதிகப்படியான வீக்கம், அதிகப்படியான இரத்த உறைதல் மற்றும் சில வகையான இயற்கைக்கு மாறான வெகுஜன வளர்ச்சி ஆகியவை ப்ரோமைலைனின் சிகிச்சை அளவுகளால் குறைக்கப்படலாம். ". என்று தெரிவிக்கப்படுகிறது.

அழற்சி எதிர்ப்பு அன்னாசிப்பழத்தோல் டீ தயாரிப்பது எப்படி?

publive-image

அன்னாசிப்பழத்தோலில் தேநீர் தயார் செய்ய முதலில் புதிதாக வெட்டப்பட்ட அன்னாசிப்பழத்தின் தோலை எடுத்துகொள்ளவும். பிறகு அவற்றை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

அதன்பின் ஒரு பாத்திரத்தில் சுத்தமான அன்னாசிப்பழத் தோல்கள், இஞ்சி துண்டு, கிராம்பு மற்றும் பிற பொருட்களைச் சேர்க்கவும்.

பிறகு இவற்றுடன் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.

அதன்பின்னர் இந்த தேநீரை வடிகட்டிகைக்கொள்ளவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த அழற்சி எதிர்ப்பு அன்னாசிப்பழத்தோல் டீ தயாராக இருக்கும். இவற்றை சாப்பிடுவதற்கு முன் சில நிமிடங்கள் குளிர்வித்துக்கொள்ளவும்.

publive-image

இந்த அன்னாசி தேநீர் ஆரோக்கியமானது, எளிதானது மற்றும் சூப்பரான சுவை கொண்டது. எனவே , இந்த ஈஸியான செய்முறையை நீங்களும் முயற்சித்துப்பாருங்கள் மக்களே!!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment