/tamil-ie/media/media_files/uploads/2021/07/tamil-indian-express-31.jpg)
Prediabetes tips in tamil: நமது உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நீரிழிவு நோய் இந்தியாவில் வளர்ந்து வரும் சவாலாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 20 மற்றும் 70 வயதிற்குட்பட்டவர்களில் 8.7% பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே நீரிழிவு நோயாளிகளைத் தவிர, பல இளம் இந்தியர்களும் நீரிழிவு நோயின் விளிம்பில் உள்ளனர். எனவே, உணவு மற்றும் உடற்பயிற்சி வழக்கமான மாற்றங்களை உள்ளடக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த நிலையை நிர்வகிக்க சிறந்த வழி என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
"பிரீடியாபயாட்டிஸ் (நீரிழிவுக்கு முந்தையது) என்பது நவீனகால வாழ்க்கை முறையின் அச்சுறுத்தலாகும். கவனிக்கப்படாமல் விட்டால், அந்த நபர் நீரிழிவு நோயாளியாக மாறக்கூடும் ”என்று ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் ஷியாம் வி.எல் குறிப்பிடுகிறார்.
நீரிழிவுக்கு (ப்ரீடியாபயாட்டிஸ்) முந்தையது என்றால் என்ன?
/tamil-ie/media/media_files/uploads/2021/07/tamil-indian-express-33.jpg)
ப்ரீடியாபயாட்டிஸ் என்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக உள்ளதே ஆகும். ஆனால் வகை 2 நீரிழிவு என வகைப்படுத்தப்படும் அளவுக்கு அதிகமாக இது இல்லை.
காரணங்கள்
ஆயுர்வேதத்தின்படி, நீரிழிவு நோய்க்கு ‘விருப்பப்படி சாப்பிடுவது’ முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
"நீண்ட நேரம் டி.வி.க்கு முன்னால் உட்கார்ந்துகொள்வது, உடல் செயல்பாடுகள் எதுவும் இல்லை, பகல் நேரத்தில் தூங்குவது ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு முந்தையவர்களால் தவிர்க்கப்பட வேண்டும்" என்று டாக்டர் ஷியாம் குறிப்பிட்டுகிறார்.
மற்ற எல்லா நோய்களையும் போலவே, நீரிழிவு நோய்க்கு முந்தைய வாழ்க்கை முறையையும் மாற்றலாம் என்று கூறும் அவர், "ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், உங்கள் அன்றாட வழக்கத்தில் உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரித்தல் போன்ற மாற்றங்களால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்" என்று அறிவுறுத்துகிறார்.
என்ன செய்ய முடியும்?
/tamil-ie/media/media_files/uploads/2021/07/tamil-indian-express-32.jpg)
அதிகப்படியான இனிப்புகள், குப்பை உணவுகள் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை ஒருவர் குறைக்க வேண்டும். "இனிப்புகள், ஐஸ்கிரீம்கள், பழ சர்க்கரை, கேக்குகள், பேஸ்ட்ரிகள், இனிப்பு பிஸ்கட், சாக்லேட், குளிர்பானம், திரிக்கப்பட்ட பால், கிரீம், வெல்லம், தயிர் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்" என்று டாக்டர் ஷியாம் கூறுகிறார்.
குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் குறைந்த கிளைசெமிக் சுமை மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை அதிகரிக்கவும். “குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை முயற்சிக்கவும். முழு தானியங்களை அடிக்கடி தேர்வு செய்யவும். கொழுப்பு சிவப்பு இறைச்சி அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கு பதிலாக கோழி, மற்றும் மெலிந்த இறைச்சியைத் தேர்வுசெய்க ”என்றும் டாக்டர் ஷியாம் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள்
மஞ்சள் மற்றும் அம்லா (நெல்லிக்கனி)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/tamil-indian-express-37.jpg)
மஞ்சள், செல்கள் மத்தியில் இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்க உதவுகிறது மற்றும் குளுக்கோஸின் வழிகாட்டியாவும் செயல்படுகிறது. அதே வேளையில் அம்லா கண்புரை தடுக்க உதவுகிறது.
ஒவ்வொரு நாளும் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடியுடன் ¼ கப் அம்லா சாறு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் கலக்கி பருகி வரலாம்.
வெந்தய விதைகள்
/tamil-ie/media/media_files/uploads/2021/07/tamil-indian-express-34.jpg)
வெந்தயம் விதைகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், லேசான வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் உதவும்.
ஊறவைத்த வெந்தயம் 2-3 கிராம் உங்கள் உணவோடு, ஒரு நாளைக்கு ஓரிரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.