நீரிழிவு, எடை இழப்புக்கு உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு… இவ்வளவு நன்மை இருக்கு!

Top health benefits of Sakkaravalli Kizhangu or Sweet potato in tamil: மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒன்று. இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் ஆகும். இவற்றில் வைட்டமின் சி, வைட்டமின் பி 5, பி 7 ஆகிய வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன.

Top health benefits of Sakkaravalli Kizhangu or Sweet potato in tamil: மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒன்று. இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் ஆகும். இவற்றில் வைட்டமின் சி, வைட்டமின் பி 5, பி 7 ஆகிய வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sakkaravalli Kilangu benefits in tamil: Sweet potato for weight loss and diabetes

sakkaravalli kilangu uses in tamil: சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவற்றில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அவை குடலின் நுண்ணுயிரியத்திற்கு நல்லது. மேலும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

Advertisment

சர்க்கரை வள்ளிக்கிழங்கை அன்றாட நாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

எடை இழப்புக்கு உதவுகிறது

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிகச்சிறந்த நண்பன். இவற்றில் நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை. கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். இது உடல் எடை இழப்புக்கும் பக்கபலமாக அமையும்.

Advertisment
Advertisements
publive-image

சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்தும். பசி உணர்வு இன்றி வயிறு நிறைந்த திருப்தியை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

செல்கள் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது

சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற ஆன்டி ஆக்சிடென்ட் உணவுகளை சாப்பிடுவது செல்கள் முதிர்ச்சி அடைவதை தடுக்கலாம். இதன் மூலம் வயதான தோற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தவிர்க்கப்படுகிறது. மேலும் நாள்பட்ட நோய்களை தடுக்கவும் இது உதவுகிறது. வழக்கமான சர்க்கரைவள்ளிக்கிழங்குடன் ஒப்பிடும்போது ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்குஆன்டி ஆக்சிடென்ட் நன்மைகளை அதிகம் கொண்டிருக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

publive-image

நீரிழிவு நோய் இருப்பவர்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்கிற தவறான உள்ளது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. இது கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிலிருக்கும் ஸ்டார்ச் மெதுவாக எரிந்து நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது

உயர் ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதற்கு தயங்க வேண்டியதில்லை. ஏனெனில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வாழைப்பழத்தில் இருப்பதை விட பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். உடலில் இருந்து கூடுதல் சோடியத்தை அகற்றவும் வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது

publive-image

வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது. இவை ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றது மேலும், எலும்பு தேய்மானம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்களாகும். ஆட்டோ இம்யூன் உள்ளிட்ட கொடிய நோய்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு இந்த இரண்டு வைட்டமின்களும் உள்ளடங்கி இருக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அபாயத்தை குறைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Food Tips Healthy Food Tamil Health Tips Health Tips Lifestyle Healthy Life Healthy Food Tamil News 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: