Advertisment

வன சர்ப்பகந்தி... இதில் இவ்வளவு நன்மை: மருத்துவர் கௌதமன்

Benefits of Sarpagandha in tamil: வன சர்ப்பகந்தியின் வேர் ரத்த அழுத்தத்தை சமன் செய்ய உதவுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், தாழ்ந்த ரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sarpagandha Health Benefits, Ayurvedic Uses in tamil

Benefits of Sarpagandha in tamil

Benefits of Sarpagandha in tamil: சிவப்பு நிற காய்களை கொண்டு வளரும் தாவரம் வகையைச் சேர்ந்தது வன சர்ப்பகந்தி. இது தூக்கமின்மை, மனம் சார்ந்த மற்றும் ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளை  இயற்கை முறையில் குணமாக்கும் அருமருந்தாக உள்ளது. இந்த அற்புத மருந்து நம்முடைய நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது.

Advertisment

வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கும் நல்ல மருந்தாக உள்ள இந்த வன சர்ப்பகந்தி இலையின்  சாறு சிவப்பு கலந்த பச்சை நிறமாக இருக்கும். இந்த சாற்றை  30 மிலி அளவுக்கு எடுத்து, காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வந்தால், மனதோடு தொடர்புடைய வியாதிகள் குணமாகும்.

இவற்றை விழுது கொட்டைப்பாக்கு அளவு  எடுத்து காலை உணவுக்கு முன்பு மட்டும் சாப்பிட்டு வந்தால் மிகப்பெரிய அளவில் ஆரோக்கியம் மேம்படும்.

வேரின் மருத்துவ குணம்:

வன சர்ப்பகந்தியின் வேர் ரத்த அழுத்தத்தை சமன் செய்ய உதவுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், தாழ்ந்த ரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

உயர் ரத்த அழுத்தத்தினால் சிறுநீரக செயல் இழப்பு உண்டாகும். தாழ்ந்த ரத்த அழுத்தத்தினால் இதய பாதிப்பு, பார்க்கின்சன் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இது போன்ற பிரச்சனைகளை வன சர்ப்ப கந்தி சரி செய்கிறது.

வன சர்ப்ப கந்தி வேரில் சாறு அல்லது விழுது எடுத்து காலை ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

தூக்கமின்மையை போக்குகிறது

உலக  சுகாதார ஆய்வறிக்கைப்படி, தூக்கத்துக்கு அதிகமாக தயாரிக்கும் மருந்துகளில் இயற்கை முறையில் தூக்கத்தை வரவழைக்கும் மூலக்கூறுகள் வன சர்ப்பகந்தியில் உள்ளன என்று தெரிவிக்கிறது.

ஒரு டிஸ்பூன் வனசர்ப்ப காந்தி சூரணத்தை பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை குறையும்.

மன நோய்க்கு எந்த  மருத்துவ முறையாலும் தீர்க்க முடியாதது என்றாலும், இயற்கை முறையில் இதைத் தீர்க்கும் அருமருந்தாக வனசர்ப்பகந்தி உள்ளது.

கற்றலில் குறைபாடு இருக்கும் குழந்தைகள், ஐக்யூ இல்லாத குழந்தைகளுக்கு காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு வன சர்ப்பகந்தி சூரணத்தை கொடுத்து வந்தால் ஐக்யூ அளவு கூடும்.

publive-image
ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்
மேலே வழங்கப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளை வழங்கியவர் "ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்" ஆவர். சென்னையைச் சேர்ந்த இவர் ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக செயலாற்றி வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment