மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி டீ; இனி இப்படி செஞ்சு பாருங்க

Hibiscus Tea for Weight Loss in tamil: செம்பருத்தி உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லதாகவும், சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு முக்கிய பொருளாகவும் உள்ளது.

Sembaruthi Tea: Hibiscus Tea for Glowing Skin in tamil

Sembaruthi Tea: செம்பருத்தி ஒரு அற்புதமான மலர் ஆகும். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதோடு நமது ஊர்களில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. இந்த அற்புதமான செம்பருத்தி மலரை நமது உணவுகளில் சேர்த்து கொள்வதால் உடலில் உள்ள சோர்வு நீங்கும் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இந்த செம்பருத்தி மலர்களை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். மற்றும் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். இதன் காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

இந்த செம்பருத்தி உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லதாகவும், சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு முக்கிய பொருளாகவும் உள்ளது. மேலும் இவற்றில் சர்பத் (செம்பருத்தி சர்பத்) செய்து பருகியும் மகிழலாம்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தியில் டீ எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

செம்பருத்தி டீ தயார் செய்வது எப்படி?

4 செம்பருத்தி இலைகளை எடுத்து அவற்றின் இதழ்களை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு சிறிய பாத்திரத்தில் 1 டம்ளர் தணண்ணீர் ஊற்றி அவை சூடானதும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கீழே இறக்கவும்.

அதன் பின்னர் அவற்றை ஒரு வடிகட்டியில் வடிகட்டி அருந்தவும்.

பின்குறிப்பு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் மட்டுமே இந்த டீ குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 2 கப் மட்டுமே அருந்த வேண்டும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sembaruthi tea hibiscus tea for glowing skin in tamil

Next Story
5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு; இப்படி செஞ்சா எல்லாருக்கும் பிடிக்கும்.Kulampu recipe: simple steps to tomato Kulambu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com