தினமும் ஒரு செவ்வாழைப் பழம்… இவ்வளவு நன்மை இருக்கு!
Medical benefits of sevvalai banana in tamil: தினந்தோறும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வருவதால், உடலில் ஏற்படும் சொறி - சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.
sevvalai benefits in tamil: ஆரோக்கிய பயன்களை அள்ளித்தரும் முக்கனிகளுள் வாழைப்பழம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இவற்றில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ பயன்களையும் உள்ளடக்கியவையாக உள்ளன. அந்த வகையில் செவ்வாழைப் பழம் தனக்கே உரித்தான பலன்களை கொண்டுள்ளது.
Advertisment
செவ்வாழைப் பழம்
செவ்வாழைப் பழத்தின் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள்
செவ்வாழைப் பழம் உடலில் ஆற்றலை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது.
உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்து காணப்படும் ஒரு பழமாகவும் செவ்வாழை பழம் இருக்கிறது.
இவற்றில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்க வல்லதாக இருக்கின்றன.
மாலைக்கண் நோயால் அவதிப்படும் மக்கள் தங்கள் இரவு உணவிற்குப்பின், தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
தினந்தோறும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வருவதால், உடலில் ஏற்படும் சொறி - சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.
செவ்வாழைப் பழம்
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் இரவு உணவிற்குப்பின், தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழப்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுவடையும்.
இந்த அற்புத பழத்தை வாரம் 1 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகளுக்கு விடுதலை கிடைக்கும். தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் செவ்வாழைப் பழத்திற்கு இருக்கிறது.
எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப்பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது. இவற்றை அன்றாட இரவு உணவுக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி கிடைக்கும்.
கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறு உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை படைத்ததாக செவ்வாழைப் பழம் உள்ளது.
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த செவ்வாழைப்பழத்தை நாமும் அனுபவித்து ஏராளமான பயன்களை பெறுவோம்.
செவ்வாழைப் பழம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“