scorecardresearch

வெயிலை தணிக்கும் வெள்ளரி ஜூஸ்… சிம்பிள் டிப்ஸ் பாருங்க!

simple steps to make Cucumber Juice and its Benefits in tamil: வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் மிகவும் பயனுள்ள ஒரு காய்கறியாக உள்ளது.

Summer drinks in tamil: how to make cucumber juice tamil

Summer drinks in tamil: கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இந்தக் கால கட்டங்களில் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். அவை இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றால் மிகவும் சிறந்தது.

அந்த வகையில், உடலுக்கு குளிர்ச்சியை அளித்து புத்துணர்ச்சியூட்டும் ஒரு காய்கறியாக வெள்ளரிக்காய் உள்ளது. இது கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் மிகவும் பயனுள்ள ஒரு காய்கறியாக உள்ளது. இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதய நோய் அபாயத்தை குறைத்தல், ஆரோக்கியமான எடை மேலான்மை, உடலை நச்சுத்தன்மையிலிருந்து வெளியேற்றுதல், கண் ஆரோக்கியத்தை பராமரித்தல், இரத்தத்தை சுத்தம் செய்தல் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையளித்தல் போன்ற பல ஆரோக்கிய நமைகளை வெள்ளரிக்காய் உள்ளடக்கியுள்ளது. வெள்ளரியின் சாறு இரைப்பை மற்றும் குடல் புண்கள், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

ஒரு நடுத்தர வெள்ளரி எடுத்து மசித்து, அதில் சில புதினா இலைகள், காய்ச்சாத பால் சேர்த்து அரை கப் தண்ணீருடன் பருகி வந்தால், கோடை வெப்பம் தணித்து போகும். வெள்ளரியின் விதைகள் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் மூக்கு இரத்தப்போக்குக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இப்படியாக ஏராளமான அற்புத நன்மைகளை உள்ளடக்கி வெள்ளரிக்காயில் டேஸ்டியான மற்றும் வெயிலை தணிக்கும் வெள்ளரி ஜூஸ் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

வெள்ளரி ஜூஸ் தயார் செய்யத் தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
தேன்- 2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்

வெள்ளரி ஜூஸ் செய்முறை:

முதலில் வெள்ளரிக்காயை தோலுரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பிறகு மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அந்த சாறுடன் கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான வெள்ளரிக்காய் ஜூஸ் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Summer drinks in tamil how to make cucumber juice tamil