தர்பூசணி, சிட்ரஸ், அன்னாசி… கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற பழங்கள் இவைதான்!
Top Summer Fruits and its health benefits in tamil: கோடைகாலங்களில் அதிகம் கிடைக்கும் தர்பூசணியை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை உடனடியாக ஈடு செய்யப்படுகிறது.
Top Summer Fruits and its health benefits in tamil: கோடைகாலங்களில் அதிகம் கிடைக்கும் தர்பூசணியை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை உடனடியாக ஈடு செய்யப்படுகிறது.
summer fruits in tamil: கோடைகாலத்தை நெருங்கி வரும் நாம் சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் சில பழ வகைகளையும் சேர்த்து கொள்ளலாம். இவை உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், சரும வறட்சி, உடல் வலி, கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்ற பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவும்.
Advertisment
இவை தவிர, நமது உடலின் நீரின் அளவை சீராக பராமரிக்க அதிக அளவில் பழங்களை சாப்பிடுவது சிறந்த வழியாகும். அந்த வகையில், நாம் எந்த வகையான பழங்களை இக்கோடையில் சாப்பிடலாம் என்று இங்கு பார்ப்போம்.
தர்பூசணி
Advertisment
Advertisements
நீர்ச்சத்து மிகுந்து காணப்படும் பழ வகைகளில் தர்பூசணிக்கு தனி இடம் உண்டு. இவற்றில் நீர்ச்சத்து தவிர, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற சத்துக்களும், தாதுக்களும், வைட்டமின்களும் அதிகம் உள்ளன.
கோடைகாலங்களில் அதிகம் கிடைக்கும் இந்த தர்பூசணியை சாப்பிடுவதால் உடலில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை உடனே ஈடு செய்யப்படும்.
சிட்ரஸ் பழங்கள்
திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனி போன்ற பழங்களை சிட்ரஸ் வகைப் பழங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இவற்றை அப்படியேவும் சாப்பிடலாம். அல்லது பழச்சாறாகவும் பருகி மகிழலாம்.
இந்த அற்புத பழங்களை நாம் சப்படுவதன் மூலம் வெயிலால் ஏற்படும் சோர்வு நீங்குகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
முலாம் பழம்
கோடை வெயிலுக்கு ஏற்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்களில் முலாம் பழமும் ஒன்று. இவற்றில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளன.
முலாம் பழத்தில் தயார் செய்யப்படும் ஜூஸை வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாரத்திற்கு மூன்று முறையாவது சாப்பிடலாம்.
அன்னாசிப் பழம்
நா வறட்சியை குறைக்கும் ஆற்றல் கொண்ட அற்புத பழமாக அன்னாசிப் பழம் உள்ளது. இவற்றின் சாறும் மிக சுவையாக இருக்கும்.
அன்னாசிப்பழம், நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
இந்த பழங்களை தவிர, சப்போட்டா, மாம்பழம், கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களையும் இந்த கோடையில் சாப்பிட்டு வரலாம். இவற்றின் தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும். இதன் மூலம் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகளின் அளவு அதிகரிக்கும்.
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்கள். எனவே இந்த பழங்களை அளவுக்கு அதிகமாய் உட்கொள்ளாமல், தினமும் ஒரு பழம் என்ற அளவோடு எடுத்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“