super foods for winter tamil: குளிர்காலத்தில் அடிவைத்துள்ள நமக்கு கொளுத்தும் வெயிலில் இருந்து விடிவு கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான காலத்தில் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும், பருவகால நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் நம் உடலுக்குத் தேவையாகும். எனவே, இந்த குளிர்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய மூன்று உணவுகளை இங்கு நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்.
இப்போது, ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் 3 உணவுகளை இங்கு ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
பாதம் பருப்பு
மெக்னீசியம், புரதம், ரைபோப்ளேவின், துத்தநாகம் போன்ற 15 ஊட்டச்சத்துக்களின் மூலமாக பாதம் உள்ளது. இவை தவிர, அதில் வைட்டமின் ஈ அதிகமாக காணப்படுகின்றது. இது நுரையீரலுக்கு நோயெதிர்ப்பு செயல்பாட்டை தூண்டும் ஒரு தூண்டுகோளாகவும் செயல்படுகிறது. மேலும், வைட்டமின் ஈ வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.
பாதமை எப்படி உண்ணலாம்?
பாதாம் பருப்பு ஒரு எளிமையான சிற்றுண்டியாகும். எனவே அவற்றை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம். இவற்றை எந்தவொரு இந்திய மசாலாகளுடன் வேண்டுமானாலும் சேர்த்து உண்ணலாம்.
ஆரோக்கியமான மற்றும் சுவையான தின்பண்டங்கள் தயார் செய்யும்போது, உங்களுக்கு பிடித்த சுவைகளுடன் பாதாம் பருப்பையும் கலந்து கொள்ளலாம்.
இஞ்சி
மருத்துவ குணம் அதிகம் காணப்படும் பொருள்களில் இஞ்சி முக்கிய இடத்தை பெறுகின்றது. அதனால் என்னவோ நாம் அவற்றை உணவிலும் மற்ற தின்பண்டங்களிலும் சேர்க்கிறோம். நோயெதிர்ப்பு, பாக்டீரியா மற்றும் வைரஸ்களைத் தடுக்க இஞ்சி அதிகம் உதவுகின்றது. உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்க வல்லதாகவும் இவை உள்ளது.
இஞ்சியை எப்படி சேர்த்துக்கொள்ளவது?
காலையில் வெறும் வயிற்றில் எலுமிசையுடன் சாறுடன் இஞ்சி கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். மற்றும் குடல் சுத்தமாக இருக்கும். இஞ்சி கலந்த தேனீர் அருந்துவது உடலுக்கு நல்லது. எனவே இஞ்சியை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
சிட்ரஸ் பழங்கள்
தினந்தோரும் உணவிற்கு பின்னர் சிட்ரஸ் அமிலம் கலந்த ஒரு பழம் எடுத்துக்கொண்டால் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள். அதே வேளையில் பழத்தை சாறகா அருந்துவதை விட, அவற்றை நன்கு கழுவிய பின் உண்பது உடலுக்கு வலு தரும் எனவும் கூறுகின்றனர்.
சிட்ரஸ் அடங்கியுள்ள அனைத்து பழங்களும் (வைட்டமின் சி) நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. அது மட்டும்மல்லால் ஜலதோஷத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என நீண்ட காலமாக அறியப்படுகிறது.
ஆரஞ்சு, எலுமிச்சை, கிவிஸ் மற்றும் கொய்யா உள்ளிட்ட ஒவ்வொரு சிட்ரஸ் பழத்திலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இவை பெரும்பாலும் குளிர்கால மாதங்களில் அறுவடை செய்யப்படுகின்றது. இந்த குளிர் காலத்தை வண்ணமயமான சிட்ரஸ் பழங்களோடு கொண்டாடுவோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“