தினமும் கையளவு வேர்க்கடலை… இவ்ளோ பலன் இருக்கு!

Top Health Benefits of Groundnuts in tamil: தினமும் சிறிதளவு வேர்க்கடலையை உட்கொள்வது இதய ஆரோக்கியம், மூளையின் செயல்பாடு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Tamil Health tips: benefits of A Handful Of Groundnuts per day tamil

Tamil Health tips: நிலக்கடலை என்று அழைக்கப்படும் வேர்க்கடலை ஒரு ருசியான மற்றும் ஆரோக்கியமான பருப்பு வகை ஆகும். இது அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதிக புரத உள்ளடக்கம் ஆகியவற்றிற்காக அனைவராலும் விரும்பப்படுகிறது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும், தின்பண்டங்களிலும் வேர்க்கடலை பயன்படுத்தப்படுகிறது.

இப்படி பல்வேறு ஆரோக்கிய பயன்களையும், நன்மைகளையும் உள்ளடக்கியுள்ள வேர்க்கடலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

ஏன் நிலக்கடலை?

நிலக்கடலையில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஃபோலேட், காப்பர் மற்றும் அர்ஜினைன் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும், நிலக்கடலையில் உள்ள புரதச்சத்து நிறைந்த கலவை உடல் எடையை குறைக்க அல்லது தசை வலிமையைப் பெற முயற்சிக்கும் நபர்களுக்கு சிறந்தது.

நிலக்கடலையில் கலோரிகள் அதிகம். ஆனால் தினமும் சிறிதளவு நிலக்கடலையை உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சுமார் 100 கிராம் வேர்க்கடலையில் தோராயமாக 567 கலோரிகள், 25.8 கிராம் புரதம், 49.2 கிராம் கொழுப்பு, 16.1 கிராம் கார்ப்ஸ் மற்றும் 8.5 கிராம் நார்ச்சத்து உள்ளது.

ஆய்வுகளின்படி, தினமும் சிறிதளவு வேர்க்கடலையை உட்கொள்வது இதய ஆரோக்கியம், மூளையின் செயல்பாடு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நம்முடைய அன்றாட உணவில் நிலக்கடலையை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கு இன்னும் சில காரணங்கள் இங்கே பார்க்கலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

நிலக்கடலையை தினமும் உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ராலை (எல்டிஎல்) குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆய்வுகளின்படி, நிலக்கடலை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது தமனிகளில் அடைப்பைத் தடுக்க உதவுகிறது. மேலும், நிலக்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் என்ற கலவை இதய பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

நம்முடைய உணவில் சிறிதளவு வேர்க்கடலையைச் சேர்ப்பது நமது மூளையின் ஆற்றலை மேம்படுத்துகிறது. மேலும், நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ஆய்வுகளின் படி, உங்கள் உணவில் வேர்க்கடலையைச் சேர்த்துக்கொள்வது அல்சைமர் நோய் போன்ற நோய்களில் இருந்து கணிசமாக மேம்படுத்த உதவும். மற்றும் நினைவகத்தை அதிகரிக்கும்.

வேர்க்கடலையில் வைட்டமின் பி3 அல்லது நியாசின் நிறைந்துள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், வேர்க்கடலை செரோடோனின் வெளியிடுவதன் மூலம் மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் டிரிப்டோபனின் இருப்பு தூக்கத்தைத் தூண்டுவதற்கும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

எடை குறைக்க உதவுகிறது

வேர்க்கடலை பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் சிறிய பசியை நிர்வகிக்கிறது. மேலும், இவற்றில் நார்ச்சத்து இருப்பதால் நீண்ட காலத்திற்கு நம்முடை முழுதாக வைத்திருக்கும். எனவே நிலக்கடலையை சிற்றுண்டி சாப்பிடுவது நல்லது.

வேர்க்கடலை வெண்ணெய் (peanut butter) சேர்த்து உங்கள் ஷேக்குகள், ஸ்மூத்திகள் ஆகியவை நிறைவாக உணர உதவும்.

வேர்க்கடலை எடை இழப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.

நிலக்கடலையை எப்படி பயன்படுத்துவது?

நம்முடைய அன்றாட உணவில் வேர்க்கடலையை சேர்க்க பல வழிகள் உள்ளன:

கறிகள் மற்றும் சூப்களில் ஒரு கிரீமி அமைப்பைக் கொடுக்க நிலக்கடலையின் பேஸ்ட்டைச் சேர்க்கலாம்.

சாலட்களில் வறுத்த வேர்க்கடலை பருப்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஷேக்ஸ் மற்றும் ஸ்மூத்திகள் அல்லது ஆரோக்கியமான புட்டுகளில் வேர்க்கடலை வெண்ணெய் (peanut butter) சேர்க்கலாம்.

துண்டுகளாக்கப்பட்ட ஆப்பிள்கள், பிரட் டோஸ்ட்களில் வேர்க்கடலை வெண்ணெய் (peanut butter) சேர்ப்பது அல்லது இறைச்சி உணவுகளுடன் சாஸாகப் பயன்படுத்துவது ஆரோக்கியமான மற்றும் சுவையான விருந்தாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health tips benefits of a handful of groundnuts per day tamil

Next Story
இந்த 2 பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க… ஏன் தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express