Tamil Health tips: தொன்மை மிக்க உணவுப் பட்டியல்களை கொண்டவர்கள் தமிழர்கள் தான் என்றால் மிகையாகாது. நம்முடைய உணவு கலாச்சாரத்தில் உள்ள உணவுகள் விருந்தாகவும் மருந்தாகவும் நமக்கு உதவுகின்றன. இந்த வகை உணவுகளை உட்கொண்ட நம்முடைய முன்னோர்கள் உறுதியானவர்களாவும், வலிமையானவர்களாவும் இருந்தனர்.
தற்போது மாறி வரும் உணவு கலாச்சாரங்களால் நாம் மாடர்ன் உணவுகளுக்கு மாறி வருகிறோம். எனினும், நாம் அன்றாட உண்ணும் அரிசி சாதத்தில் ஊட்டச்சத்து மிகுந்து காணப்படுகிறது. முந்தைய இரவில் வடிக்கப்பட்ட சாதத்தை வடிநீர் மற்றும் தண்ணீர் ஊற்றி பழைய சாதமாக மாற்றி, மறுநாள் காலையில் சிறிதளவு மோர் அல்லது தண்ணீர் ஊற்றி சாப்பிட்டால், அதற்கு இணை எந்த உணவும் வராது.
ஆனால், இன்று நம்மில் பலர் ஈசியாக சாதம் தயார் செய்ய வேண்டும் என எண்ணி குக்கர் நோக்கி நகர்கிறோம். மேலும், வடிநீரில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது பலரும் அறியாத ஒன்றாகவே உள்ளது.
சாதம் வடித்த கஞ்சி நமது உடல் நலத்தை வலுப்படுத்தும் எண்ணற்ற மூலக்கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது.
இந்த அற்புதமான அரிசி கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னும். குளித்து முடித்தவுடன் கஞ்சியை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். தலையை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இது உதவும்.
வடித்த அரிசி கஞ்சியுடன் ஒரு டம்ளர் மோர் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாகும். இவற்றுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரண சக்தி அதிகம் கிடைக்கும்.
வலி நிவாரணியாக பயன்படும் இந்த அரிசி கஞ்சியுடன் சிறிதளவு வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி எடுத்ததால் கால் வீக்கத்தை குறையும்,
நம்முடைய துணிகளை ‘அயர்ன்’ செய்யும் போது சிறிதளவு கஞ்சி சேர்த்துக் கொண்டால் துணிகள் பளபளக்கும், நிறம் மங்காது.
பசி எடுக்கமால் அவதியுறும் மக்கள் கஞ்சியுடன் சிறிது சீரகம் கலந்து குடித்தால் பசி நன்றாக தூண்டும். சாப்பிட்ட உணவும் நன்கு செரிமானமாகும்.
அரிசி கஞ்சியை திராட்சையுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் மிளிரும்.
சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை குணப்படுத்துவதிலும் கஞ்சி இன்றியமையா இடம் பிடிக்கிறது. காட்டன் துணியில் கஞ்சியை நனைத்து சிரங்கு உள்ள இடங்களில் கட்டி வந்தால் புண்ணின் ரணம் ஆறும்.
வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வடித்த கஞ்சியுடன் வெந்தயத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் வயிறு வலி விரைவில் குணமாகும்.
வேர்க்குரு தென்படும் இடத்தில் கஞ்சியை தடவி வந்தால் வேர்க்குரு பிரச்சினை தீரும்.
தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அரிசி கஞ்சியை நெற்றி, கழுத்து, கை, முகம் போன்ற இடங்களில் தேய்த்து வருவதன் மூலம் வயதான தோற்றத்தை தவிர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.