/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-26T201142.644.jpg)
Ragi health benefits in tamil: ராகி மால்ட் என்று அழைக்கப்படும் ராகி பால் சூப்பர்ஃபுட் வகைகளுள் ஒன்றாகும். இவை உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் எடை கண்காணிப்பாளர்கள் மத்தியில் அதிகம் பரிந்துரைக்கப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சுவாரஸ்யமாக, இவற்றை உறங்கும் நேரத்தில் குடிப்பதால் எல்லா நோய்களையும் சரி செய்யலாம் என்ற கூற்றுகள் இணைய பக்கங்களில் நிரம்பி வழிகின்றன. ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மை மற்றும் இந்த சூப்பர்ஃபுட் பானத்தை முயற்சித்துப் பார்ப்பது உண்மையில் சிறந்ததா? என்று நாம் இங்கு பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-26T202314.318.jpg)
ஃபிங்கர் மில்லட் அல்லது கேழ்வரகு என்றும் அழைக்கப்படும் ராகி, நாட்டின் பல பகுதிகளில் உட்கொள்ளப்படும் ஒரு பிரபலமான தினை வகை. குறிப்பாக, இந்தியாவின் தென்பகுதியில், ராகி உணவுகள் சமையல் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சூப்பர்ஃபுட் என்றும் அறியப்படுகிறது.
ராகி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
ராகியில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் போன்ற அத்தியாவசிய மேக்ரோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் சி, ஈ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நல்ல அளவில் உள்ளது. மேலும், தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் மற்றும் ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய சேர்மங்கள் ராகியை ஆரோக்கியமான குறிப்பில் தொடங்குவதற்கு சரியான சூப்பர் கிரேன் ஆக்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-26T201933.197.jpg)
ஆனால், பாலையும் ராகியையும் சேர்த்து உறங்கும் முன் பானமாகப் பயன்படுத்துவது சரிதானா? உண்மையில் அதன் பலன்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்?.
ராகி சாப்பிட சிறந்த நேரம் எது?
ராகியில் புரோட்டீன்கள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் போன்ற மேக்ரோநியூட்ரியண்ட்கள் இரண்டும் நிறைந்துள்ளன. அவை செரிமானத்தின் போது உடைக்க போதுமான நேரம் தேவைப்படுகிறது. ராகியை உட்கொள்வது பசியைக் கட்டுப்படுத்தவும், நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்கவும் உதவும். இதுவும் ஒரு காரணம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-26T201754.222.jpg)
இருப்பினும், வாய்வு மற்றும் அசௌகரியம் போன்ற உணர்வைத் தவிர்க்க இரவில் ராகி உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனென்றால், இரைப்பை குடல் அமிலங்கள் சுரப்பது பகலில் நடக்கிறது, இது ராகியில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது.
இரவு உறங்கும் முன் ராகி பால்குடிக்க அருந்தலாமா?
இரவு உறங்கும் முன் சூடான பால் குடிப்பது ஆரோக்கியமான பழக்கங்களில் ஒன்று என நம்பப்படுகிறது. ஆனால் ராகியை அதில் சேர்த்து மால்ட் வடிவில் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.
உறங்குவதற்கு முன் ஆரோக்கியமான ராகி உணவை உட்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், ராகியில் ஒரு சிறிய பகுதியை மால்ட் தயாரிப்பதற்குச் சேர்ப்பது, சிறந்த மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், தூக்கத்தைத் தூண்டவும், அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் எடையைக் குறைக்கவும் உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-26T201737.243.jpg)
ராகி பாலில் உள்ள புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் ஒருங்கிணைப்பு நரம்புகளை தளர்த்தி தூக்கத்தை ஏற்படுத்த உதவும். பால் டிரிப்டோபனை வெளியிட உதவுகிறது மற்றும் செரோடோனின் அளவை மேம்படுத்துகிறது. மேலும் ராகியுடன் இதை இணைப்பது மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது, மனநிலை மாற்றங்களை நிர்வகிக்கிறது மற்றும் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க நீங்கள் ஒரு பானத்தைத் தேடுகிறீர்களானால், ஒரு எளிய ராகி பால் பானம் வளர்சிதை மாற்ற விகிதத்தை விரைவுபடுத்த உதவும். ஏனெனில் ராகி பால் இரண்டும் வளர்சிதை மாற்றத்திற்கு சிறந்தவை மற்றும் இவைகளின் கலவையானது நள்ளிரவு பசியிலிருந்து உங்களைத் தடுக்கும். .
நீங்கள் ஒரு எளிய ராகி பால் பானம் அல்லது கிளாசிக் ராகி மால்ட்டை ஒரு சிறிய பகுதியில் உட்கொள்வதை உறுதிசெய்து, அதன் பலனைப் பெற தூங்குவதற்கு குறைந்தது 2 மணிநேரத்திற்கு முன் அதைக் குடியுங்கள்.
ராகி மால்ட் செய்ய சிம்பிள் டிப்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-26T201444.411.jpg)
ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 ½ கப் தண்ணீர் சேர்த்து அவற்றுடன் 2 தேக்கரண்டி ராகி மாவு சேர்க்கவும்.
20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு கடாயை எடுத்து, இந்தக் கலவையைச் சேர்த்து, கொதிக்க விடவும்.
கலவை கெட்டியாக மாறும் வரை நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பிறகு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும். கடைசியாக ½ கப் பால் சேர்க்கவும், குறைந்த கொழுப்புள்ள பாலையும் பயன்படுத்தலாம்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த ராகி மால்ட் தயராக இருக்கும் அவற்றை பருகி மகிழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.