/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T172232.259.jpg)
Tamil health tips: குளிர்காலத்தில் பயணித்து வரும் நமக்கு உடல் ரீதிரியாக சில பிரச்சனைகள் எழுவது வழக்கம். அந்த வகைகள், எடை இழப்பை விரும்பும் மக்கள் சில பிரச்சனைகளை இந்த குளிர்கால மாதங்களில் சந்திக்க கூடும். ஏன்னென்றால், இந்த மாதங்களில் சூடான மற்றும் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோம். இதனால், உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், முறையான மற்றும் சரியான உணவு திட்டமிட்டால் மூலம் இந்த எடை அதிகரிப்பை முறியடிக்கலாம்.
இந்த குளிர் காலத்தில் சில ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் முதலியவற்றை உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த குறைந்த கலோரி காய்கறிகள் உடல் எடையில் கூடுதல் பவுண்டுகளை இழக்கவும், தொடர்ந்து முன்னேறி செல்லவும் உதவுகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T172108.911.jpg)
அப்படி உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் நான்கு ஆரோக்கியமான கீரைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
முள்ளங்கி இலைகள்
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T171945.463.jpg)
சாலட்களில் தவறாமல் இடம்பிடிக்கும் இலைகளில் முள்ளங்கி இலைகளுக்கு முக்கிய பங்குண்டு. இந்த குறைந்த கலோரி இலைகள் ஃபைபர் மூலம் செறிவூட்டப்பட்டு, வளர்சிதை மாற்ற அளவை அதிகரிப்பதில் அதிசயங்களைச் செய்யும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T171957.605.jpg)
100 கிராம் முள்ளங்கி இலையில் 16 கலோரிகள் மட்டுமே கிடைக்கும். கடுகு இலைகளைப் போலவே, இவை ஒரு காரமான சுவை கொண்டது. இருப்பினும், மற்றொரு மாவுச்சத்துள்ள காய்கறியுடன் சமைத்தால், உதாரணமாக உருளைக்கிழங்குடன், முள்ளங்கி இலைகள் சுவையான, ஆரோக்கியமான மற்றும் குறைந்த கலோரி காய்கறி கறியாக அனுபவிக்கலாம்.
மேத்தி அல்லது வெந்தய இலைகள்
கசப்பான சுவை கொண்ட இந்த வெந்தய இலைகள், குளிர்காலத்தில் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. மிகவும் ஆரோக்கியமான வெந்தய இலைகள் பெரும்பாலும் உருளைக்கிழங்குடன் காய்கறி கறியாக சமைக்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T172412.302.jpg)
ஊட்டச்சத்துகளை பொறுத்தவரை, பீட்டா கரோட்டின் அஸ்கார்பிக் அமிலம் நிறைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன், இவை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறந்த எடை இழப்புக்கான குறைந்த ஆபத்துடன் உள்ளன.
கடுகு இலைகள்
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து சமைக்கும் போது, காரமான சுவையுடைய இந்த கடுகு இலைகளை சேர்த்து சமைத்தால் மிகவும் அற்புதமான சுவையை கொடுக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T172424.038.jpg)
100 கிராம் கடுகு இலைகளில் வெறும் 27 கலோரிகள் தான் உள்ளது. மேலும் இவை நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி மூலம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.
மற்ற கீரைகள்
கீரைகள் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களைக் கொண்ட ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகளில் ஒன்றாகும். இவை நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும்.இந்த ஊட்டச்சத்துக்கள் ஒன்று சேரும்போது, அவை எடை இழப்புக்கான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. மனநிறைவைத் தூண்டுகின்றன மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த பங்களிக்கின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/tamil-indian-express-2022-01-25T172431.606.jpg)
கலோரிகளைப் பொறுத்தவரை, 100-கிராம் கீரைகள் உங்களுக்கு 23 கலோரிகளை மட்டுமே தருகிறது, இதனால் இது சிறந்த எடை இழப்பு உணவாக அமைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.