Tamil health tips: நமது உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருவதில் காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. இதில் பழங்களுக்கு என தனி இடம் உண்டு. ஏனென்றால், பழத்தில் தான் நமது உடலுக்கு அன்றாட தேவைப்படும் ஊட்டச்சத்துக்களும், கனிம சத்துக்களும் அதிகம் காணப்படுகின்றன.
குறிப்பாக, பேரீச்சையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தாதுக்களில் பொட்டாசியம் குறிப்பிட்ட அளவில் உள்ளது.

பேரீச்சையின் அற்புத பயன்கள்
எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் சர்க்கரை சத்து நிறைந்ததுள்ள பேரீச்சம்பழம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும், சக்தியையும் தருகிறது.
குடற்பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றுவதில் சிறப்பாக செயல்படுகிறது பேரீச்சை.
இவற்றில் உள்ள பொட்டாசியம் தாது உடற்செல்களுக்கும், உடலும் வளவளப்புடன் இருக்கவும் உதவுகிறது. மேலும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் இது காக்கிறது.

பேரீச்சையில் ‘வைட்டமின் ஏ’ சத்து நிரம்பி காணப்படுவதால், அவை கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் நல்ல தீர்வை தருகிறது.
மேலும் இவற்றில் காணப்படும் சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லூடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது.
தவிர, குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.

நாம் தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். தசை வளர்ச்சி பெறும். உடலுக்கு வலு கிடைக்கும்.
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சியும் குணமாகும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பேரீச்சம் பழம் நல்ல பலனை தருகிறது. இவற்றை சர்க்கரை நோயாளிகள் கூட அன்றாட சாப்பிட்டு வரலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“