ஆரஞ்சு பழத்தில் சுகர்… முட்டை மஞ்சள் கரு ஆபத்து? விடை தெரிய வேண்டிய உணவுப் புதிர்கள்

diet facts in tamil: ஒரு பெரிய முட்டையில் சுமார் 185 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, இவை அனைத்தும் மஞ்சள் கருவில் உள்ளன.

diet facts in tamil: ஒரு பெரிய முட்டையில் சுமார் 185 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, இவை அனைத்தும் மஞ்சள் கருவில் உள்ளன.

author-image
WebDesk
New Update
Tamil Health tips: five diet myths and facts in tamil

tamil health tips: டயட் இருப்பது என்றால் பட்டினி கிடப்பது அல்லது சாதுவான, வேகவைத்த உணவை மட்டுமே உட்கொள்வது என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால் அது அப்படியல்ல?

Advertisment

டயட் இருப்பவர்கள் சந்தித்து வரும் சில பொதுவான உணவு கட்டுக்கதை எவை என்று அடையாளப்படுத்தியுள்ள டயட்டீஷியன் ருசிதா பாத்ரா அவற்றை எவ்வாறு கையாள்வது என்று தனது சமீபத்திய இன்ஸ்டா பதிவில் பகிர்ந்துள்ளார்.

கட்டுக்கதை 1: பால் அழற்சி

உண்மை:-

பால் சார்ந்த பொருட்கள் கால்சியம், வைட்டமின் டி, மற்றும் பல்வேறு கொழுப்புகள் மற்றும் புரதங்கள் உட்பட அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் செயலில் உள்ள சேர்மங்களையும் கொண்டுள்ளது. அந்த ஊட்டச்சத்துக்களின் விகிதாச்சாரம் உணவிலிருந்து உணவுக்கு மாறுபடும்.

கட்டுக்கதை 2: முட்டையின் மஞ்சள் கரு ஆரோக்கியமற்றது

உண்மை:-

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே மற்றும் பி 12 மற்றும் ஃபோலேட், இரும்பு மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

Advertisment
Advertisements

ஒரு பெரிய முட்டையில் சுமார் 185 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, இவை அனைத்தும் மஞ்சள் கருவில் உள்ளன. ஆனால் ஆரோக்கியமற்ற இரத்தக் கொழுப்பிற்கு உணவு கொலஸ்ட்ரால் முக்கிய காரணம் அல்ல என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

கட்டுக்கதை 3: ஆரஞ்சு சாற்றில் அதிக சர்க்கரை உள்ளது!

உண்மை:-

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரஞ்சு சாற்றில் சர்க்கரை சேர்க்கப்படாவிட்டால், பழத்தின் அதே அளவு சர்க்கரை இருக்கும். இதனால், புதிதாக பிழிந்த சாறு நன்றாக இருக்கிறது.

இருப்பினும், கடையில் வாங்கிய பழச்சாறுகளில் சர்க்கரை சேர்க்கப்பட்டு இருக்கும். இது ஒரு ஆரஞ்சு (எட்டு கிராம்) அளவுக்கு அதிகமாக உள்ளது.

கட்டுக்கதை 4: கொழுப்பு உங்களை கொழுப்பு அதிகமானவராக ஆக்குகிறது!

உண்மை:-

கொழுப்பை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் தவறான கொழுப்பை உண்பது அல்லது அதிக கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

"கொழுப்புகள் இன்றியமையாதவை, நமது தற்போதைய இதய ஆரோக்கியமான, உணவு-பசி கொண்ட கலாச்சாரத்தில் கெட்ட பெயர் இருந்தாலும். அவை சரியான அளவு மற்றும் தரத்தில் உட்கொள்ளப்பட வேண்டும், ”என்று டயட்டீஷியன் ருசிதா பாத்ரா கூறுகிறார்.

கட்டுக்கதை 5: கார்போஹைட்ரேட்டுகள் உங்களை கொழுப்ப்பு உள்ளவராக ஆக்குகின்றன!

உண்மை:-

கார்போஹைட்ரேட்டுகள் உங்களை கொழுப்பாக மாற்றாது. அவை உங்களை எடை அதிகரிக்கச் செய்யாது. எடை அதிகரிப்பது அதிக கலோரிகளை சாப்பிடுவதன் விளைவாகும், கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதால் அல்ல என்று பத்ரா கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamil Lifestyle Update Healthy Food Tips Tamil Health Tips Health Tips Lifestyle Healthy Life Healthy Food Tamil News 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: