scorecardresearch

தினமும் 7 கிராம்… சுகர், பி.பி-க்கு முருங்கை இலையை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

Medical benefits of Moringa Leaves (murungai ilai) in tamil: ஒரு கப் முருங்கை இலையில் வாழைப்பழத்தை விட மூன்று மடங்கு அதிக பொட்டாசியம் உள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

Tamil health tips: from removing cholesterol to High BP Moringa Leaves benefits

Benefits of Moringa Leaves in tamil: இந்தியாவில் கொரோனா தொற்று அச்சம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை உட்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துவருகின்றனர். அந்த வகையில், இந்த அசாதாரண சூழலில் நமது உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் சூப்பர் ஃபுட்ககளுள் ஒன்றான முருங்கை இலைகளை நமது உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முருங்கை மரம் இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வறட்சியைத் தாங்கும் மரங்களில் ஒன்றாகும். இந்த மரத்தின் காய்கள் மற்றும் இலைகள் இரண்டும் பரவலாக உட்கொள்ளப்படுகின்றன. காய்களை நாம் சாம்பார் அல்லது குழம்புகளில் பயன்படுத்தலாம். அதன் இலைகளை ரசம், பொரியல், சூப் என பல உணவுகளை தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

முருங்கை இலை

முருங்கையில், வேறு எந்த பழங்கள் அல்லது காய்கறிகளிலும் இல்லாத ஊட்டச்சத்து நன்மைகள் இருப்பதாக பல அறிக்கைகள் நமக்கு கூறுகின்றன. உதாரணமாக, முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது. இதன் கால்சியம் செறிவு பாலை விட அதிகம் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் நிரம்பியுள்ளது

முருங்கை மரம் பல ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட பயன்படுத்தப்படுகிறது. வளரும் நாடுகளில், மக்கள் தங்கள் உணவில் போதுமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் இல்லாத நிலையில், முருங்கை இலை அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

moringa benefits in tamil: Health Benefits of Moringam leaves in tamil

முருங்கை இலைகளில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், அவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்துள்ளன.இது தவிர, இவற்றில் அதிக அளவு ஐசோதியோசயனேட்ஸ் என்ற ஊட்டச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

2014 ஆம் ஆண்டில், உயர் இரத்த சர்க்கரை அளவு கொண்ட 30 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் ஏழு கிராம் முருங்கை பொடியை தவறாமல் உட்கொள்ளும்படி செய்தனர். மூன்று மாதங்களின் முடிவில், இரத்தப் பரிசோதனையில் சராசரியாக 13.5% சர்க்கரை அளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு முருங்கை

முருங்கை இலைகள் வழங்கும் மற்றொரு மருத்துவ நன்மை இரத்த அழுத்த அளவைக் குறைப்பதாகும். இது ஆபத்தான இதய நோய்களைத் தடுக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்று ஊட்டச்சத்து நிறைந்த உணவு இல்லாத உணவாகும். தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்தக் கழகத்தின் கூற்றுப்படி, பிபி அளவைக் குறைக்க பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் நிறைந்த உணவு அவசியம்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க அல்லது தடுக்க பொட்டாசியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்றும் அதே ஆய்வு குறிப்பிடுகிறது.

முருங்கை இலையில் பொட்டாசியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் முருங்கை இலையில் வாழைப்பழத்தை விட மூன்று மடங்கு அதிக பொட்டாசியம் உள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய அதிக செறிவு ஊட்டச்சத்துக்கள் இந்த இலை பச்சையை மற்ற சூப்பர் கீரைகளான கேல் போன்றவற்றை விட ஆரோக்கியமானதாக ஆக்குகிறது.

இலைகளில் பாலிஃபீனால்கள் மற்றும் ஐசோதியோசயனேட்ஸ் போன்ற உயிர்வேதியியல் கலவைகள் நிரம்பியுள்ளன, இவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களைத் தடுப்பதிலும், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் பங்கு வகிக்கின்றன.

மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஜெய்ஸ்ரீ ஜெயின் கூறுகையில், இந்த உயிர்வேதியியல் கலவைகள் தமனிகளில் படிந்திருக்கும் கொழுப்பை நீக்கி இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை எளிதாக்க உதவுகின்றன. நீரிழிவு அல்லது உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை தங்கள் உணவில் தவறாமல் சேர்க்குமாறும் அவர் அறிவுறுத்துகிறார்.

“ஒரு நபருக்கு புதிய முருங்கை இலைகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் உலர்ந்த முருங்கை தூள் கொண்ட கூடுதல் பொருட்களை தேர்வு செய்யலாம். இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளலாம். இதை காலையில் குடிப்பதால் குடல் இயக்கமும் மேம்படும்.” என்று தெரிவிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health tips from removing cholesterol to high bp moringa leaves benefits