வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்… இவ்வளவு நன்மை இருக்கு!
Here’s why you should consume ghee in the morning, according to the nutritionist in tamil: நெய்யை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால், உங்கள் செரிமான அமைப்பு சுத்தப்படுத்துகிறது.
Here’s why you should consume ghee in the morning, according to the nutritionist in tamil: நெய்யை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால், உங்கள் செரிமான அமைப்பு சுத்தப்படுத்துகிறது.
ghee benefits in tamil: நெய் உட்கொள்வதால் நமது உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இவை உணவுகளுக்கு சுவையை உயர்த்துவது மட்டுமல்லாமல், எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஆரோக்கியமான கொழுப்பு என்றும் அறியப்படுகிறது. இந்த அற்புத உணவுப்பொருளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
Advertisment
மேலும், உடலைப் புத்துணர்ச்சியடையச் செய்வதற்கும், உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் அறியப்பட்ட, வெண்ணெய்யின் தெளிவுபடுத்தப்பட்ட வடிவமான நெய், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் உட்கொண்டால், நமது உடலுக்கு பல அதிசயங்களைச் செய்யும்.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அவந்தி தேஷ்பாண்டே தனது சமீபத்திய இன்ஸ்டா பதிவில் "ஆயுர்வேதத்தின் படி, இது சிறுகுடலின் உறிஞ்சுதல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் நமது இரைப்பைக் குழாயின் அமிலத்தன்மையின் pH ஐ குறைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர், ஒரு டீஸ்பூன் நெய்யுடன் உங்கள் நாளைத் தொடங்குவதால் கிடைக்கும் முக்கிய பல ஆரோக்கிய நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளார். அவற்றை இப்போது பார்க்கலாம்.