இம்யூனிட்டி, ஜீரண சக்தி… தேன்- பூண்டு இப்படி சாப்பிட்டு பாருங்க!

Benefits of Honey-Soaked Garlic in tamil: தேனில் ஊறவைத்த பூண்டு சளி, இருமல், வைரஸ் தொற்றுகள், கல்லீரல் செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உங்கள் செரிமான அமைப்புக்கு சிறந்தது.

Tamil health tips: How To Make Honey-Soaked Garlic Recipe in tamil

Tamil health tips: மசாலாப் பொருட்கள் முதல் பழங்கள் மற்றும் காய்கறிகள் வரை, நம் சமையலறையில் ஒவ்வொரு நாளும் ஊட்டமளிக்க உதவும் பொருட்கள் உள்ளன. அத்தகைய ஒரு பல்துறை மூலப்பொருளாக பூண்டு இருக்கிறது. இதன் காரமான சுவை மற்றும் வலுவான நறுமணம் சமையல் உலகில் பிரபலமான தேர்வாக ஆக்குகிறது. பருப்பு, சப்ஜி, பீட்சா, பாஸ்தா மற்றும் பல உணவு வகைகளில் பூண்டு சேர்க்கப்படுவதால் பலரும் அவற்றை விரும்புகின்றனர்.

பூண்டு பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது. பல சுகாதார நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள், உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு, பச்சை பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

வாழ்க்கைப் பயிற்சியாளரும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான லூக் குடின்ஹோ, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பச்சைப் பூண்டை நமது தினசரி வழக்கத்தில் சேர்க்க மற்றொரு ஆரோக்கியமான வழியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அது என்ன வழி என்றால், பச்சை பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது தான்.

தேனில் ஊறவைத்த பூண்டின் ஆரோக்கிய நன்மைகள்:

எடை இழப்பு, ஜலதோஷம், நச்சு நீக்கம் மற்றும் பலவற்றிற்கு பூண்டு எப்போதும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் என்று கூறப்படுகிறது. தேனுடன் இவற்றை இணைந்தால் (அதன் செழுமையான ஊட்டச்சத்துக்கு பெயர் பெற்றது), அவற்றின் நன்மைகள் உடனடியாக இரட்டிப்பாகும்.

தேனில் ஊறவைத்த பூண்டு “சளி, இருமல், வைரஸ் தொற்றுகள், கல்லீரல் செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உங்கள் செரிமான அமைப்புக்கு சிறந்தது.” என்று ஊட்டச்சத்து நிபுணர் லூக் குடின்ஹோ தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிடுகிறார்.

தேனில் ஊறவைத்த பூண்டு சிம்பிள் செய்முறை

முதலில் பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.

பிறகு, காற்று புகாத கண்ணாடி ஜாடியில் பச்சையாக, பேஸ்டுரைஸ் செய்யப்படாத தேனில் (unpasteurised honey) கலக்கவும்.

பின்னர் ஒரு வாரம் ஊற வைக்கவும்.

“நீங்கள் ஒரு நாளைக்கு 1 துண்டு உட்கொள்ளலாம். வெறும் வயிற்றில் உட்கொண்ட பிறகு அது எரியும் உணர்வை ஏற்படுத்தினால், காலை அல்லது இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடுங்கள்” என்று ஊட்டச்சத்து நிபுணர் லூக் குடின்ஹோ தனது இன்ஸ்டா பதிவில் பரிந்துரைக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health tips how to make honey soaked garlic recipe in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express