சுகர், தொப்பை, இதய நோய்... காளான் உணவு ஏன் முக்கியம் தெரியுமா?
Important Reasons To Add mushrooms To Your Diet and latest finding in tamil: இந்த காளான்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய செல்லுலார் மற்றும் மூலக்கூறு வழிமுறைகளை ஆய்வு செய்யும்.
Important Reasons To Add mushrooms To Your Diet and latest finding in tamil: இந்த காளான்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய செல்லுலார் மற்றும் மூலக்கூறு வழிமுறைகளை ஆய்வு செய்யும்.
Mushrooms health benefits in tamil: நம்மில் பலர் காளான்களை எந்த முறையில் சமைத்தாலும் அதை ருசித்து உண்போம். காளான்கள் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. நம்முடைய அன்றாட உணவில் காளான்களைச் சேர்ப்பது நமது குடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisment
"உங்கள் உணவில் உண்ணக்கூடிய காளான்களைச் சேர்ப்பது மேற்கத்திய பாணி உணவு (WSD) உடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களை எதிர்ப்பதற்கான ஒரு சிறந்த வழியாக இருக்கும். இது பெரும்பாலும் கொழுப்பு உணவுகள் மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது." என்று காளான்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆம்ஹெர்ஸ்ட் ஊட்டச்சத்து நிபுணரான ஜென்ஹுவா லியுவின் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார்.
கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகள் உடல் பருமன், டைப் -2 நீரிழிவு நோய், இதய நோய், சில புற்றுநோய்கள் மற்றும் பிற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என்பதால், மேற்கத்திய பாணி உணவுகளில் காளான்களைச் சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோயைத் தடுக்கவும் உதவுகிறது. "குடல் செயலிழப்பு WSD தொடர்பான நோய்களின் வளர்ச்சிக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் அடிப்படை வழிமுறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது," என்று லியு கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் சன்ட்ரைடு சிப்பி காளான்கள் தாதுக்கள், உணவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றில் உள்ள தனித்துவமான ஊட்டச்சத்தை கொண்டுள்ளன. "இயற்கையான முழு உணவாக, இது மேற்கத்திய பாணி உணவுகளின் தரத்தை மேம்படுத்துவதோடு மேலும் பொது குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் முடியும்.
இந்த காளான்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய செல்லுலார் மற்றும் மூலக்கூறு வழிமுறைகளை ஆய்வு செய்யும். WSD இன் தரம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முழு உணவு அணுகுமுறையாக காளான்கள் பற்றிய முக்கியமான நுண்ணறிவை இந்த கண்டுபிடிப்புகள் வழங்கும்
எனவே, உங்கள் வழக்கமான, உணவில் காளான்களை சேர்க்க மறக்காதீர்கள். அவை சாலட்டில் இருந்தாலும், வறுத்தலில் சமைத்தாலும் அல்லது ஆம்லெட்டாக மடிக்கப்பட்டாலும், அவை ஊட்டச்சத்து நிறைந்த விருந்தாகும்." என்று லியு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“